ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் கஞ்சா விற்ற நால்வர் கைது: 2 கிலோ கஞ்சா பறிமுதல்

ஸ்ரீவில்லிபுத்தூரில் கஞ்சா விற்ற நால்வரை இன்று கைது செய்த போலீஸார் அவர்களிடம் இருந்த 2.300 கி.கி. கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

News image
Updated On :15 செப்டம்பர் 2015, 1:38 pm

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூரில் கஞ்சா விற்ற நால்வரை இன்று கைது செய்த போலீஸார் அவர்களிடம் இருந்த 2.300 கி.கி. கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீஸ் சார்பு ஆய்வாளர் வீரணன், அய்யம்பட்டி தேவர் தெரு பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அய்யம்பட்டி செக்கடித் தெருவைச் சேர்ந்த கந்தசாமி மனைவி கோது லட்சுமி (40) என்பவர் கஞ்சா விற்றுக் கொண்டிருந்தார். அவரிடம் இருந்த 1.100 கி.கி. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸார், அவரைக் கைது செய்தனர்.

மங்காபுரம், அரசு போக்குவரத்துக் கழக பணி மனையின் பின்புறம் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கஞ்சா விற்றுக் கொண்டிருந்த அய்யம்பட்டி தேவர் தெருவைச் சேர்ந்த சிவசாமி மனைவி இந்திரா (50), வீரணன் மகன் காசி மாயன் (38), முருகன் மகன் சத்யா (31) ஆகியோரைக் கைது செய்து அவர்களிடம் இருந்த 1.200 கி.கி. கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.