ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

கலசலிங்கம் மணிமண்டம் திறப்பு விழா: ஏராளமானோர் பங்கேற்பு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இக் கல்வி நிறுவனத்தின் தலைவர் தி.கலசலிங்கம் மணிமண்டபம் திறப்பு விழா இன்று வேந்தர் க.ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது.

News image
Updated On :20 செப்டம்பர் 2015, 1:29 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இக் கல்வி நிறுவனத்தின் தலைவர் தி.கலசலிங்கம் மணிமண்டபம் திறப்பு விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) வேந்தர் க.ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது.

ராம்கோ தொழில் குழுமத்தின் தலைவர் பி.ஆர்.ராமசுப்பிரமணியராஜா, பல்கலைக்கழக இயக்குநர்கள் டாக்டர் அறிவழகி, டாக்டர் சசிஆனந்த், அர்ஜூன் கலசலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வேந்தர் ஸ்ரீதரன் வரவேற்றார்.

மணிமண்டபத்தை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் விஸ்வநாதன் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

கலசலிங்கம் கடைசி ஒரு மாதத்திற்கு முன்பு என்னிடம் பேசுகையில், தாம் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும், நிறைவேற்றி முடித்துள்ள பணிகள் குறித்தும் கூறினார்.

வறுமை மற்றும் குற்றங்களைக் குறைக்க கல்வியால்தான் முடியும்.

ஐப்பான் நாட்டின் மக்கள் தொகை 12 கோடி. இங்கு 212 பல்கலைக்கழகங்கள் உள்ளன. இதில் 3 கோடி பேர் படித்து வருகிறார்கள். இந்தியாவின் மக்கள் தொகை 125 கோடி. இங்கு 800 பல்கலைக்கழகங்கள் உள்ளன. இவற்றில் 2.8 கோடி மாணவர்கள் தான் படித்து வருகிறார்கள். இந்தியாவில் 14 கோடி பேர் படிக்க வாய்ப்புகள் உள்ளது. நாம் இன்னும் கல்வியில் வளர்ச்சி அடைய வேண்டிய அவசியத்தில் உள்ளோம். நம் நாட்டில் சில இடங்களில் அதிக மதிப்பெண்கள் தேவை என்று சொல்லி பற்றாக்குறையை உருவாக்குகிறார்கள்.

இந்தியாவில் 400 மருத்துவக் கல்லூரிகள் உள்ளது. இங்கு ஆண்டிற்கு 50 ஆயிரம் பேர் மட்டுமே படிக்க இயலும். ஆனால் 6 லட்சம் விண்ணப்பங்கள் வருகிறது.

பில்கேட்ஸ் பணம் சம்பாதிப்பதில்லை என முடிவு செய்து, ஒரு நாளைக்கு ரூ.6 கோடி செலவு செய்தாலும், சொத்து முழுவதையும் செலவு செய்ய 203 ஆண்டுகள் வேண்டுமாம்.

ஆனால் இந்தியாவில் 100-க்கு 33 பேர் வறுமையில் வாடுகிறார்கள். இந்தியாவில் ஏற்ற தாழ்வுடன் பொருளாதார வளர்ச்சி காணப்படுகிறது. இதனைத் தடுத்து நிறுத்த கல்வியால்தான் முடியும்.

கல்விக்கும் சுகாதாரத்திற்கும் எந்த நாடு அதிக நிதி ஒதுக்கீடு செய்கிறதோ, அந்த நாடு முன்னேறும் என்றார் அவர்.

பட்டிமன்ற பேச்சாளர் ராஜா சிறப்புரையாற்றுகையில் கூறியதாவது:

நம் தமிழ் சமுதாயத்திற்கு, குடும்பத்தில் வாழ்ந்த மனிதர்களை நினைத்துப் பார்ப்பவர்கள் தேவை. இன்று இதன் பிரதிபலிப்புதான் இந்த மணிமண்டபம். பேரன், பேத்திகளுக்கு பெரியவர்களை மதிக்க கற்றுத் தர வேண்டும். தாத்தா, பாட்டியை பிள்ளைகள் மறக்கக்கூடாது. பெற்றோர் தங்கள் பிள்ளைகளிடம் தாத்தா பாட்டி இல்லையெனில் நான் இல்லை என்று குழந்தைகளிடம் சொல்லித் தர வேண்டும் என்றார் அவர்.

நிகழ்ச்சியில் துணை வேந்தர் ச.சரவணசங்கர், பதிவாளர் வெ.வாசுதேவன், பார்மஸி கல்லூரி முதல்வர் பழனிவேல், பாலிடெக்னிக் முதல்வர் எம்.கருணாநிதி, ஐ.டி.ஐ. முதல்வர் தங்கவேல், பல்கலைக்கழகத்தின் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இயக்குநர் டாக்டர் அறிவழகி நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.