மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் நாளை தொடக்கம்!மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!இந்தியாவுக்கு வரவேண்டிய கப்பல்கள் ஹோா்முஸ் நீரிணையில் சிக்கித் தவிப்பு!21 மாநிலங்கள் - யூனியன் பிரதேசங்களுக்கு மீண்டும் மண்ணெண்ணெய் ஒதுக்கீடுஈரான் பொதுக் கட்டமைப்பை நிா்மூலமாக்குவோம்: டிரம்ப் மிரட்டல்
/

இலுப்பூர் அருகே இருசக்கரவாகனம் மரத்தில் மோதி விபத்து: இளைஞர் சாவு

இலுப்பூர் அருகே இன்று இருசக்கரவாகனம் மரத்தில் மோதிய விபத்தில்  இளைஞர் உயிரிழந்தார்.

News image
Updated On :24 செப்டம்பர் 2015, 3:03 pm

சி. உதயகுமார்

இலுப்பூர் அருகே இன்று இருசக்கரவாகனம் மரத்தில் மோதிய விபத்தில்  இளைஞர் உயிரிழந்தார்.

இலுப்பூர் பள்ளிவாசல் காட்டைச் சேர்ந்தவர் ரகமதுல்லா மகன் முகமதுகபில்(25) தனியார் வாகன ஓட்டுநர் இவர் இன்று தனது இருசக்கர வாகனத்தில் இலுப்பூர் விராலிமலை சாலையில் சாங்கிராப்பட்டி பிரிவு அருகே சென்று கொண்டிருந்த போது சாலையோர மரத்தில் இருசக்கர வாகனம் மோதியதில் தலையில் காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பக்ரீத் பண்டிகையன்று நேரிட்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து இலுப்பூர் காவல் ஆய்வாளர் எஸ். வேலுச்சாமி வழக்கு பதிந்து விசாரிக்கிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.