ஒகேனக்கல் காவிரியில் சனிக்கிழமை ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால், அங்குள்ள அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
கர்நாடக மாநில அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதால், ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து கடந்த 23-ஆம் தேதி நொடிக்கு 7,000 கன அடியாக அதிகரித்தது. இது படிப்படியாக அதிகரித்து நொடிக்கு 12,000 கன அடியாக இருந்தது.
இந்த நிலையில், ஒகேனக்கல் காவிரியில் சனிக்கிழமை காலை நீர்வரத்து நொடிக்கு 31,000 கன அடியாக அதிகரித்தது.
காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்தாலோ அல்லது கர்நாடக அணையில் இருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு அதிகரித்தாலோ இந்த நீர்வரத்து மேலும் அதிகரிக்கக் கூடும். ஒகேனக்கல்லில் காவிரியாற்றில் 20,000 கன அடிக்கு அதிகமாக நீர்வரத்து இருக்கும் நிலையில், சுற்றுலாப் பயணிகள் அருவிக்குச் செல்லவும், ஆற்றில் குளிக்கத் தடை விதிக்கப்படும்.
தற்போது நீர்வரத்து 31,000 கன அடியாக நீடிப்பதால் பிரதான அருவிக்குச் செல்லும் நடைபாதையை மூழ்கடித்து தண்ணீர் செல்வதுடன், அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிரதான அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும், ஆற்றில் இறங்கவும் தருமபுரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
விடுமுறை தினமான சனிக்கிழமை அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டதையடுத்து, ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

