திருநெல்வேலி மாவட்டத்தில் சனிக்கிழமை பல்வேறு இடங்களில் இடியுடன்கூடிய பலத்த மழை பெய்தது. இதனால், வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கடும் வெப்பம் நிலவி வருகிறது. இந்த நிலையில், சனிக்கிழமை அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி பகுதிகளில் பிற்பகலில் 2 மணி நேரம் இடியுடன்கூடிய பலத்த மழை பெய்தது. இதனால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
தொடர்ந்து பெய்த மழையால் மின்தடை ஏற்பட்டது.
இதேபோல, விக்கிரமசிங்கபுரம், சேரன்மகாதேவி, முக்கூடல், மேலச்செவல், முன்னீர்பள்ளம் உள்பட மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் பரவலாக மழை பெய்தது.
திருநெல்வேலி சந்திப்பு, வண்ணார்பேட்டை, மேலப்பாளையம், பாளையங்கோட்டை பகுதியில் மாலையில் பெய்த மழையால் வெப்பம் குறைந்து குளிர்ந்த காற்று வீசியது. பல இடங்களில் மின்தடையும் ஏற்பட்டது.
சனிக்கிழமை காலை நிலவரப்படி அதிகபட்சமாக ஆலங்குளத்தில் 18.4 மி.மீ., சங்கரன்கோவிலில் 15 மி.மீ. மழை., நம்பியாறு அணையில் 51 மி.மீ. மழை பதிவானது.
பாபநாசம் அணையின் நீர்மட்டம் 57.65 அடி, சேர்வலாறு அணை 67.98 அடி, மணிமுத்தாறு அணை 56.37 அடியாக இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







