மதுராந்தகம் தொகுதி தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் வெற்றி!தாராபுரத்தில் தவெக வேட்பாளர் சத்தியபாமா வெற்றிதமிழ் வம்சாவளி நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு! மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக முன்னிலை: விசிலடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!தட்டாஞ்சாவடியில் டெபாசிட் இழந்த திமுக!மதுராந்தகத்தில் தொடக்கம் முதலே கோலோச்சும் மரகதம்!தட்டாஞ்சாவடி: என்ஆர் காங்கிரஸ் வெற்றி

விவசாய சங்கங்களின் வேலைநிறுத்த போராட்டத்துக்கு வணிகர் சங்கம் ஆதரவு

காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாய சங்கங்கள் சார்பில், வருகிற 29-ஆம் தேதி நடைபெறவுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு வணிகர் சங்கங்களின் பேரவை ஆதரவு அளிக்கும் என்று, அந்தப் பேரவையின் மாநிலத் தலைவர் த. வெள்ளையன் தெரிவித்தார்.

Published On :

காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாய சங்கங்கள் சார்பில், வருகிற 29-ஆம் தேதி நடைபெறவுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு வணிகர் சங்கங்களின் பேரவை ஆதரவு அளிக்கும் என்று, அந்தப் பேரவையின் மாநிலத் தலைவர் த. வெள்ளையன் தெரிவித்தார்.

திருவாரூரில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை அவர் மேலும் கூறியதாவது: காவிரியில் தமிழகத்துக்கான உரிமையில் கர்நாடகம் நியாயமாக நடந்து கொள்ளாமல், தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது. கர்நாடகத்தின் இந்தச் செயலை மத்தியில் ஆட்சிக்கு வரும் எந்தக் கட்சியும் கண்டிப்பதில்லை.

கர்நாடகம் தமிழகத்துக்கு தண்ணீர் கொடுக்காததைக் கண்டித்து, தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய டெல்டா மாவட்டங்களில் வருகிற 29-ஆம் தேதி விவசாய சங்கங்கள் சார்பில் சாலை மறியல், ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதற்கு வணிகர் சங்கங்களின் பேரவை ஆதரவு அளிக்கும். ஆனால், கடைகளை அடைக்கக் கோரி கட்டாயப்படுத்தக் கூடாது என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.