இந்திய அரசின் பாதுகாப்புக்கான 5 தேசிய விருதுகளை திருச்சி பெல் நிறுவனம் வென்றுள்ளது.
மனிதவள மேம்பாட்டு மையத்தின் உற்பத்தி ஆலை, மிக நீண்ட விபத்துகள் அற்ற காலகட்டத்தில் செயல்பட்டது, மிகக் குறைவான விபத்து சராசரிக்காகவும், ஆண்டுக்கு
10 லட்சம் மனித நேரம் வரை செயல்படும் ஆலைகள் பிரிவில் இரண்டு விருதுகளை வென்றுள்ளது.
மேலும் இணைப்பில்லா எஃகுக் குழாய் ஆலை மிக நீண்ட விபத்துகள் அற்ற காலகட்டத்திற்காக 10 லட்சத்துக்கும் கூடுதலான மனித நேரத்துடன் செயல்படும் ஆலைகள் பிரிவில் இரண்டாம் இடம் பெற்றது.
ஒரு கேடயமும் சான்றிதழும் கொண்ட இந்த விருதுகளை இணைப்பில்லா எஃகு குழாய் சார்பில் பொது மேலாளர் பு. ஜெயபிரகாசும், மனிதவள மேம்பாட்டு மையத்தின் சார்பில் துணைப் பொதுமேலாளர் பி.பி.துரைசாமியும், ஆற்றல் அமைப்புகள் குழுவின் சார்பில் துணைப் பொது மேலாளர் மு. முத்துகுமார்ரும் தில்லியில் அண்மையில் நடைபெற்ற விழாவில், மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயாவிடமிருந்து பெற்றுக் கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

