கனமழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!கனமழை: நீலகிரியில் 6 தாலுகாக்களில் இன்று (அக். 24) பள்ளிகளுக்கு விடுமுறை!தமிழகத்தில் இரு நாள்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை! அக். 26-இல் புயல் உருவாக வாய்ப்பு!கடன் பத்திரங்கள் மூலம் ரூ. 9,000 கோடி திரட்டுகிறது தமிழக அரசு!அருணாசல் எல்லையில் ரோந்துப் பாதைகளை சீன படைகள் பின்பற்றாததால் பதற்றம்: இந்தியாபாகிஸ்தானில் இந்திய ஆதரவு பயங்கரவாதத்தை ஒழிப்போம்! ராணுவ தலைமைத் தளபதி முனீா்!ரூ. 84,084 கோடிக்கு ‘சமுத்ர மந்தன்’ திட்டம்: கடலுக்கு அடியில் எண்ணெய், எரிவாயு தேட வழிகாட்டுதல்கள் வெளியீடு

விவசாய சங்கங்களின் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு வணிகர் சங்கம் ஆதரவு

விவசாய சங்கங்கள் சார்பில் செப்.29-ம் தேதி நடைபெறவுள்ள வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு வணிகர் சங்கங்களின் பேரவை ஆதரவு அளிக்கும் என்றார் வணிகர் சங்கங்களின் பேரவை மாநிலத் தலைவர் த. வெள்ளையன்.

Updated On :

விவசாய சங்கங்கள் சார்பில் செப்.29-ம் தேதி நடைபெறவுள்ள வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு வணிகர் சங்கங்களின் பேரவை ஆதரவு அளிக்கும் என்றார் வணிகர் சங்கங்களின் பேரவை மாநிலத் தலைவர் த. வெள்ளையன்.

திருவாரூரில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

காவிரியில் தமிழக உரிமையில் கர்நாடகம் நியாயமாக நடந்து கொள்ளமால் தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிராகவே நடந்து கொள்கிறது. கர்நாடகத்தின் இச்செயலை மத்தியில் ஆட்சிக்கு வரும் எந்தக் கட்சியும் நடவடிக்கை மேற்கொள்வதில்லை.

கர்நாடகம் தமிழகத்துக்கு தண்ணீர் கொடுக்காததைக் கண்டித்து தமிழகத்தில் செப்.29-ம் தேதி விவசாய சங்கங்கள் மற்றும் மக்கள் நலன் காக்கும் கூட்டியக்கம் சார்பில் சாலை மறியல், ஆர்ப்பாட்டம் நடத்துக்கிறது. இதற்கு வணிகர் சங்கங்களின் பேரவை ஆதரவு அளிக்கும். ஆனால் கடைகளை அடைக்கக்கோரி கட்டாயப்படுத்தக் கூடாது.

அனைத்துத் தொழில்களிலும் அந்நிய ஆதிக்கம் இருப்பதுக்கு காரணம் உலக வர்த்தக ஒப்பந்தம்மே. 2016 சட்டப் பேரவைத் தேர்தலில் உலக வர்த்தக ஒப்பந்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் கட்சிக்கு ஆதரவு அளிக்கப்படும். அவ்வாறு எந்த அரசியல் கட்சியும் கருத்து தெரிவிக்கவில்லையெனில் மக்களிடத்தில் தேர்தலை புறக்கணிக்க பிரசாரம் மேற்கொள்ளப்படும். தமிழகத்தில் நடந்து முடிந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு மக்களுக்கு எவ்வித பயனும் அளிக்காது என்றார் வெள்ளையன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.