திமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!பாஜக ஆட்சியில் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றப்படும்: ராஜ்நாத் சிங்பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ், திரிணமூல்: பாடம் புகட்டப்படும் - மோடி
/

அருப்புக்கோட்டையில் குடிநீர் வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலைமறியல்

அருப்புக்கோட்டையில் குடிநீர் வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் இன்று சாலைமறியலில் ஈடுபட்டனர்.

Updated On :29 செப்டம்பர் 2015, 3:04 pm

அருப்புக்கோட்டையில் குடிநீர் வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் இன்று சாலைமறியலில் ஈடுபட்டனர்.

அருப்புக்கோட்டை 28-வது வார்டைச் சேர்ந்த நாகலிங்கநகர் பகுதியில் கடந்த ஒரு மாதமாக சரியாக குடிநீர் விநியோகம் செய்யவில்லையாம். இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் மனுவும் அளித்துள்ளனர். ஆனால், இதுவரையில் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இந்நிலையில் பொதுமக்கள் குடிநீர் விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வந்துள்ளனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் விருதுநகர் பிரதான சாலையில்  சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து விரைந்து வந்த நகர் காவல் நிலைய போலீஸார் மற்றும் நகராட்சி அலுவலர்கள் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, குடிநீர் விநியோகம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்படும் என சமரசம் செய்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் விருதுநகர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அரைமணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.       

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.