புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
/

திமுக-காங்கிரஸ் கூட்டணியில் தமாகா? இளங்கோவன் விளக்கம்

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் தமாகா இணைவது குறித்து தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் இளங்கோவன் பதிலளித்துள்ளார்.

Updated On :2 ஏப்ரல் 2016, 10:29 am

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் தமாகா இணைவது குறித்து தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் இளங்கோவன் பதிலளித்துள்ளார்.

அதாவது, தமிழக சட்டப்பேரவைக்கு நடைபெறும் தேர்தலில் போட்டியிட திமுக தலைமையில் உருவாகியிருக்கும் கூட்டணியில் தமாகா இணைய வாய்ப்பில்லை என்று இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

திமுக - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிப்பது குறித்த கேள்விக்கு, இன்னும் ஓரிரு நாட்களில் தொகுதிப் பங்கீடு முடிவு செய்யப்படும் என்றார் இளங்கோவன்.

காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், திமுக தலைவர் கருணாநிதியுடன் மீண்டும் ஒரு முறை பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அதன்பிறகு ஓரிரு நாட்களில் தொகுதிப் பங்கீடு முடிவு செய்யப்படும் என்று இளங்கோவன் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.