ஆடிப்பெருக்கு, அமாவாசை, குருபெயர்ச்சி: பண்ருட்டியை புரட்டிப்போட்ட புரளி
ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, குருபெயர்ச்சி என மூன்று விசேஷங்களும் ஒரே நாளில் வந்திருப்பதால் இன்று ஏராளமான கோயில்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது.


பண்ருட்டி: ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, குருபெயர்ச்சி என மூன்று விசேஷங்களும் ஒரே நாளில் வந்திருப்பதால் இன்று ஏராளமான கோயில்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது.
ஆடிப்பெருக்கை கொண்டாட வந்த புதுமணத் தம்பதிகளும், ஆடி அமாவாசைக்கு தர்ப்பணம் கொடுக்க வந்தவர்களும், குரு பெயர்ச்சியை முன்னிட்டு பரிகாரப் பூஜை செய்ய வந்தவர்களும் என தமிழகத்தில் அனைத்துக் கோயில்களிலுமே இன்று அதிகாலை முதலே பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது.
இந்த நிலையில், பண்ருட்டி அருகே உள்ள திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் ஏராளமான பெண்கள் திரண்டுள்ளனர். இவர்கள் திங்கட்கிழமை இரவு 12 மணி முதலே கோயிலில் தங்கியுள்ளனர். இதற்குக் காரணம் ஒரு புரளி.
ஆடி அமாவாசை, குருபெயர்ச்சி, ஆடி பதினெட்டு இவை மூன்றும் ஒரு சேர வந்துள்ளதால் மாமியார் முகத்தில் மருமகள் முழிக்கக் கூடாது எனவும் ஒரே வீட்டில் இன்றைய தினம் இருவரும் இருக்கக் கூடாது எனவும் புரளி பரவியது.
இதைத் தொடர்ந்து பண்ருட்டியை சுற்றியுள்ள பகுதிகளில் 15க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் இரவு 12 மணி முதல் முகாமிட்டு தங்கியுள்ளனர்.
மேலும் பலர் மேல்மருவத்தூர், மேல்மலையனூர் உள்ளிட்ட பல கோயில்களுக்கும் சென்று தங்கியுள்ளனர். இவர்கள் இன்று இரவு 12 மணி வரை கோயில்களிலேயே தங்கியிருந்து, விடியற்காலையில் வீடுகளுக்குத் திரும்ப உள்ளனர்.
இந்த புரளியைக் கிளப்பியது யார் என்பதும், எப்படி பரவியது என்பதும் புரியாத புதிராகவே உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...