சென்னை: தமிழர்களின் பாரம்பரிய அடையாளமான ஜல்லிக்கட்டிற்கு உச்ச நீதிமன்றம் விதித்துள்ள தடையை நீக்குமாறு பிரதமரை வலியுறுத்த வேண்டும் என்று ஆளுநரை சந்தித்து வைகோ வேண்டுகோள் வைத்துள்ளார்.
மதிமுக தலைவர் வைகோ இன்று காலை தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை ஆளுநர் இல்லத்தில் சந்தித்து பேசினார். சந்திப்பின் முடிவில் ஆளுநர் மாளிகைக்கு வெளியே செய்தியாளர்களை அவர் சந்தித்தார்.. அப்பொழுது அவர் கூறியதாவது:
ஆளுநர் வித்யாசங்கர்ராவ் என் நீண்ட நாள் நண்பர். வாஜ்பாயி அரசில் அவர் அமைச்சராக இருந்த காலத்தில் இருந்தே எங்களுக்குள் நெருங்கிய நட்பு உண்டு.அவரை இன்று சந்தித்த பொழுது, தமிழர்களின் பண்பாட்டு அடையாளமான, நீண்ட பாரம்பரியம் கொண்ட ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருப்பது பற்றி எடுத்துக் கூறினேன்.
அந்த தடையை நீக்க தமிழக அரசு எடுத்த முயற்சிகள் பற்றியும், தடையை நீக்க வேண்டியதன் அவசியம் பற்றியும் விரிவாக விளக்கினேன். அதனை அவர் ஆமோதித்தார். பிரதமர் மோடி அவர்களை வரும் 10-ஆம் தேதி அன்று நடைபெற உள்ள நிகழ்ச்சி ஒன்றில் சந்திக்கவிருப்பதாக கூறியவரிடம், இதுகுறித்து பிரதமரிடம் வலியுறுத்தி கூறுமாறு வேண்டுகோள் வைத்தேன்.
இவ்வாறு வைகோ தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


