திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றம் தொடங்கியது
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா இன்று சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.


திருவண்ணாமலை: திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா இன்று சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இன்று அதிகாலை 3.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட உற்சவ பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
பின்னர், கோயில் தங்கக் கொடிமரம் எதிரே பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி, அருள்பாலித்தனர். தொடர்ந்து, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, காலை 8 மணியளவில் உத்திராட நட்சத்திரம், தனுர் லக்னத்தில் கோயில் தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ். ராமச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...