முதல்வர் உடல்நிலை: வழக்கமான பணிகளுக்கு 'லீவு' விட்ட அமெரிக்க தூதரகம்!
முதல்வர் உடல்நிலை தொடர்பாக நிலவும் சூழ்நிலையால் சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் தனது வழக்கமான பணிகள் தற்காலிகமாக நடைபெறாது என்று அறிவித்துள்ளது.


சென்னை: முதல்வர் உடல்நிலை தொடர்பாக நிலவும் சூழ்நிலையால் சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் தனது வழக்கமான பணிகள் தற்காலிகமாக நடைபெறாது என்று அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தூதரகத்தின் இணையத்தளத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு பின்வருமாறு:
சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் திங்களன்று குறைவான எண்ணிக்கையில் ஊழியர்களுடன் இயங்கும்.மேலும் அமெரிக்க குடிமக்கள் மற்றும் அமெரிக்க விசா வேண்டி விண்னப்பிப்பவர்களுக்கான வழக்கமான சந்திப்புகள், சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
விண்ணப்பதாரர்களுக்கு இது தொடர்பான தகவல்கள் மின்னஞ்சலில் அனுப்பப்படும். அத்துடன் எப்பொழுது சேவைகள் மீண்டும் துவங்கும் என்பது பின்னர் தெரிவிக்கப்படும்.
இவ்வாறு இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...