சென்னை: உடல்நலக்குறைபாடு காரணமாக ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரிக்க வந்த மதிமுக தலைவர் வைகோவின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி (92), தொண்டை மற்றும் நுரையீரல் தொற்றால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக, சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் வியாழக்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டார்.
பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
அந்த வரிசையில் இன்று மாலை மதிமுக தலைவர் வைகோ கருனாநிதியை சந்தித்து நலம் விசாரிக்க மருத்துவமனைக்கு வருகை தந்தார். அப்போது அங்கே குவிந்திருந்த திமுக தொண்டர்கள் அவருடைய வாகனத்தை சூழ்ந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.
அவர்களின் எதிர்ப்பினால் அதிர்ச்சியடைந்த வைகோ வாகனத்தை திரும்புமாறு உத்தரவிட்டார். இருந்த போதிலும் ஆத்திரத்தில் இருந்த தொண்டர்கள் சிலர் அவருடைய வாகனத்தை தாக்க முயன்றனர். அவருடைய வாகனத்தின் மீது கற்கள்,காலணிகள் வீசப்பட்டன.
இதனால் மருத்துவமனை வளாகத்தில் பதற்றமம் ஏற்பட்டு, சிறிது நேரம் கூச்சல் குழப்பம் நிலவியது. இதனிடையே வைகோ அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


