சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரிக்க வந்த மதிமுக தலைவர் வைகோவின் கார் மீது திமுக தொண்டர்கள் தாக்குதல் நடத்தியதற்கு திமுக பொருளாளர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மூச்சுத்திணறல் காரணமாக, சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் வியாழக்கிழமை இரவு அனுமதிக்கப்பட்ட கருணாநிதியை சந்தித்து நலம் விசாரிப்பதற்காக மதிமுக தலைவர் வைகோ மருத்துவமனைக்கு வருகை தந்தார்.
அப்போது அங்கே குவிந்திருந்த திமுக தொண்டர்கள் அவருடைய வாகனத்தை சூழ்ந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர். ஆத்திரத்தில் இருந்த தொண்டர்கள் சிலர் அவருடைய வாகனத்தை தாக்கவும் முயன்றனர். இதனிடையே வைகோ அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
தற்போது இந்த சம்பவத்திற்கு திமுக பொருளாளர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
காவிரி மருத்துவமனையில் வைகோவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.
மருத்துவமனையில் நான் இல்லாத சமயத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட திமுக தொண்டர்களுக்கு என்னுடைய கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த சூழ்நிலையில் திமுக தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும்.
தொண்டர்கள் இத்தகைய சம்பவத்தில் ஈடுபடுவதில் எனக்கோ கருணாதிக்கோ சற்றும் உடன்பாடு கிடையாது
இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


