அதிமுகவில் இருந்து நடிகர் ஆனந்தராஜ் விலகல்!
அதிமுகவிலிருந்து விலகுவதாக நடிகர் ஆனந்தராஜ் அறிவித்துள்ளார்.


சென்னை; அதிமுகவிலிருந்து விலகுவதாக நடிகர் ஆனந்தராஜ் அறிவித்துள்ளார்.
அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராக இருந்த நடிகர் ஆனந்தராஜ் அக்கட்சியில் இருந்து விலகுவதாக இன்று திடீர் என்றுஅறிவித்துளார். இது தொடர்பாக அவர் இன்று சென்னையில் தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் .அப்போது அவர் கூறியதாவது:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அவருக்கு வாரிசாக யார் வர வேண்டும் என்பதை பற்றியெல்லாம் எதுவும் கூறவில்லை. ஜெயலலிதாவால் மக்களுக்கு அடையாளம் காட்டப்பட்டவர்கள் எல்லாம் இன்று ஒன்று சேர்ந்து அதிமுகவுக்கு ஒரு தலைமையை காட்டுகின்றனர்.அது ஏற்புடையதாக இல்லை.
மக்கள் அனைவரும் ஏற்க கூடிய தலைமை ஒன்றுதான் வரவேண்டும். யாரையும் கட்டாயப்பபடுத்தி வர வைக்க கூடாது.சுயலாபத்திற்காக அமைச்சர்கள் செயல்படுகின்றனர். நிகழும் சம்பவங்கள் ஏற்புடையதாக இல்லாததால் கட்சியிலிருந்து விலகுகிறேன் .
இவ்வாறு அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...