மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ஜெயலலிதாவுக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பு உண்டா? நோபல் விருதின் விதி என்ன சொல்கிறது?

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு உலக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

News image
Updated On :25 ஜனவரி 2024, 6:39 am

DIN


சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு உலக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இன்று காலை சென்னை வானகரத்தில் நடந்த அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தில், அதிமுக பொதுச் செயலராக வி.கே. சசிகலா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

பொதுக்குழுக் கூட்டத்தில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இந்த அறிவிப்பினை வெளியிட்டார்.

இந்த தீர்மானத்துடன் சேர்த்து, தமிழகத்தில் எல்லோருக்கும் எப்பொழுதும் சத்தான உணவு என்பது சாத்தியமான லட்சியமே என்பதை மெய்ப்பித்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு, மானுட சேவைக்கான பிலிப்பின்ஸ் நாட்டின் ரமோன் மக்சைசாய் விருதும், உலக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட ஏற்பாடுகளைச் செய்தல் என்பது உள்ளிடட் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதன் அடிப்படையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நோபல் பரிசு கிடைக்குமா என்று அதன் விதிமுறைகளை புரட்டியதில், நமக்கு சோகமான பதிலே கிடைத்துள்ளது.

அதாவது, 1974ம் ஆண்டுக்குப் பிறகு, மறைந்த ஒருவரின் பெயர் நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்படுவது இல்லை. ஒரு வேளை, நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு, பரிசு வழங்கப்படுவதற்கு முன்பே, அவர் இறந்துவிட்டால் மட்டுமே, அந்த பரிசு அவரது பெயரில் வழங்கப்படும். அதுவும் நோபல் வரலாற்றில் ஒரே ஒரு முறை நடந்துள்ளது.

ஆனால், எந்த வகையிலும், உயிரிழந்த ஒருவரது பெயர் நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்படாது என்பதே தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

Story image

இதே விதி தான் காந்திக்கும் நோபல் பரிசு கிடைக்காமல் போகக் காரணமாக இருந்தது.

அதாவது, அகிம்சையை வலியுறுத்திய மகாத்மா காந்திக்கு 1937 மற்றும் 1939ம் ஆண்டுகளிலும், 1947ம் ஆண்டிலும் நோபல் பரிசு வழங்க பரிந்துரைக்கப்பட்டது. இதில் 1947ல் இந்த நோபல் பரிசு காந்திக்கு வழங்கவே முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், எதிர்பாராதவிதமாக 1948ல் காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார்.
காந்தி இறந்ததால் 1948ம் ஆண்டில் இந்த விருது யாருக்கும் வழங்கப்படவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.