வளாக நேர்காணல்: வி.பி.எம்.எம். மாணவி தேர்வு
இன்போசிஸ் நிறுவனம் நடத்திய வளாக நேர்காணலில், கிருஷ்ணன்கோவில், வி.பி.எம்.எம். மகளிர் பொறியியல் கல்லூரி மாணவி தேர்வு பெற்றார்.


இன்போசிஸ் நிறுவனம் நடத்திய வளாக நேர்காணலில், கிருஷ்ணன்கோவில், வி.பி.எம்.எம். மகளிர் பொறியியல் கல்லூரி மாணவி தேர்வு பெற்றார்.
மதுரை மண்டலத்திற்கான அண்ணா பல்கலைக்கழகம் சார்ந்த பொறியியல் கல்லூரிகளுக்கான வளாக நேர்காணல் (Centre for University – Industry Collaboration (CUIC), Anna University) திருச்சி கொங்குநாடு கல்லூரியில் நடைபெற்றது. இதில் இன்போசிஸ் நிறுவனம் நடத்திய வளாக நேர்காணலில், கிருஷ்ணன்கோவில் வி.பி.எம்.எம் மகளிர் பொறியியல் கல்லூரி, தகவல் தொழில் நுட்பத் துறை மாணவி ஏ.மாலதி வெற்றி பெற்றார். இந்த வளாகத் தேர்வில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 2000- க்கும் மேற்ப்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் தேர்ச்சி பெற்ற 55 மாணவர்களில் இக் கல்லூரி மாணவியும் தேர்ச்சி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கான பணி நியமன உத்தரவை செவ்வாய்கிழமை கல்வி நிறுவனத் தலைவர் டாக்டர் வி.பி.எம்.சங்கர் வழங்கி பாராட்டினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...