ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

தென் மாவட்ட மாணவர்களுக்கான மெகா வளாக நேர்காணல்: 121 பேருக்கு பணி நியமன ஆணை

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் இரு நாட்கள் நடைபெற்ற மெகா வளாக நேர்காணலில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி நியமன உத்தரவு

News image
Updated On :20 பிப்ரவரி 2016, 9:35 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் இரு நாட்கள் நடைபெற்ற மெகா வளாக நேர்காணலில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்கும் விழா சனிக்கிழமை வேந்தர் முனைவர் க.ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது. இயக்குநர் டாக்டர் எஸ்.சசி ஆனந்த், துணை வேந்தர் ச.சரவணசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பதிவாளர் வெ.வாசுதேவன் வாழ்த்துரை வழங்கினார்.

விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைச் சேர்ந்த 1500 மாணவ மாணவியர் இந்த வளாக நேர்காணலில் கலந்து கொண்டனர். இவர்களுக்கு பெங்களூரு வீ டெக்னாலஜி பொது மேலாளர் சௌஜன்யா தலைமையில் வந்திருந்த குழுவினர் பல்வேறு தேர்வுகளை இரு நாட்கள் நடத்தினர். இத் தேர்வில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 30 மாணவ மாணவியர், கலசலிங்கம் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியைச் சேர்ந்த 19 பேர், கலசலிங்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த 13 பேர் உள்ளிட்ட 121 மாணவ மாணவியர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு பணி நியமன உத்தரவுகளை வேந்தர் க.ஸ்ரீதரன் வழங்கி சிறப்புரையாற்றினார்.

இதற்கான ஏற்பாடுகளை பல்கலைக்கழகத்தின் வேலைவாய்ப்பு அலுவலர் முனைவர் அலாவூதீன், பேராசிர்யர்கள் பாலகுமார், செண்பகவல்லி ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.