ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

பா.ஜ.க. ஸ்ரீவிலி. சட்டப் பேரவைத் தொகுதி தேர்தல் தெருமுனைப் பிரச்சாரம்

பாரதீய ஜனதா கட்சியின் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டப் பேரவைத் தொகுதி தேர்தல் தெருமுனைப் பிரச்சாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :21 பிப்ரவரி 2016, 12:51 pm

கோ.ஜெயக்குமார்

பாரதீய ஜனதா கட்சியின் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டப் பேரவைத் தொகுதி தேர்தல் தெருமுனைப் பிரச்சாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூர், ராமகிருஷ்ணாபுரத்தில் கட்சியின் மூத்த நிர்வாகி வி.ஜி.முருகன் தலைமையில் தெருமுனைப் பிரச்சாரம் தொடக்க விழா நடைபெற்றது. கட்சியின் மாவட்டத் தலைவர் ஜி.டி.சோலையப்பன், மாவட்டச் செயலாளர் சி.சரவணதுரை (எ) ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கட்சியின் மாநில பிரச்சார அணி செயலாளர் முத்துராமன் சிறப்புரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.கே.மாரிமுத்து, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆர்.இளங்கோ செல்வன், மாவட்ட பொறியாளர் அணி தலைவர் கே.பிரபாகர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.பி.முனியசாமி, ஒன்றிய பொறுப்பாளர் தேன்கனி, வழக்குரைஞர் அணிச் செயலாளர் ஆர்.நவநீதகிருஷ்ணன், வழக்குரைஞர் வைதேவி, நகரச் செயலாளர் எம்.ஜானகிராமன உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

நகரின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற இந்த தெருமுனைப் பிரச்சாரத்தில் மத்திய நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசாங்கம் செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து விளக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.