ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

துணிச்சல் இல்லாத அறிவு துடுப்பு இல்லாத படகு: மாவட்ட நுகர்வோர் நீதிபதி

துணிச்சல் இல்லாத அறிவு, துடுப்பு இல்லாத படகு போன்றது என விருதுநகர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி வ.பாலசுந்தரகுமார் கூறினார்.

News image
Updated On :26 பிப்ரவரி 2016, 9:26 am

கோ.ஜெயக்குமார்

துணிச்சல் இல்லாத அறிவு, துடுப்பு இல்லாத படகு போன்றது என விருதுநகர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி வ.பாலசுந்தரகுமார் கூறினார்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் நேருயுவகேந்திரா சார்பில் வெள்ளிக்கிழமை தலைமைத்துவம் மற்றும் சமுதாய வளர்ச்சிக்கான இளையோர் பயிற்சி முகாம் நடைபெற்றது.

மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர் கே.ஜவஹர் தலைமை தாங்கினார். நகர்மன்ற  திரு.வி.க. மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை பி.மஞ்சுளா முன்னிலை வகித்தார். நந்தகுமார் வரவேற்றார்.

விருதுநகர் மாவட்ட நுகர்வோர் நீதி்மன்ற நீதிபதி வ.பாலசுந்தரகுமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கருத்துரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

உலகில் மனிதர்களுக்கு முக்கியமானது துணிச்சல். துணிச்சல் இல்லாத அறிவு, துடுப்பு இல்லாத படகு ஆகும். எதையும் சாதிக்க வேண்டும் என்ற உறுதியிருந்தால், வாழ்க்கையில் வெற்றி பெறலாம். கட்டபொம்மன், வ.உ.சி. போன்றவர்கள் சரித்திரத்தில் நிற்பதற்கு காரணம் அவர்களுக்குள் இருந்த துணிச்சல்.

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஆப்ரகாம் லிங்கன் வாழ்க்கையில் பல தோல்விகளைச் சந்தித்தவர். தோல்விகள் தான் அவரைப் பக்குவப்படுத்தியது. 9 வயது முதல் 49 வயது வரை பல தோல்விகளைச் சந்தித்து, 52 வயதில் அமெரிக்க நாட்டின் ஜனாதிபதியானார்.

நாம், நமக்குள்ள திறமைகளைக் கண்டறிந்து அதன் வழியே சென்றால், வாழ்வில் வெற்றி பெறலாம். இளைஞர்கள் வாழ்வில் வெற்றி பெற அதிகம் படிக்க வேண்டும். வாழ்வில் வெற்றி பெற்ற பல வெற்றியாளர்கள் சிறு வயதில் பல கஷ்டங்கள், தடைகளைக் கடந்து முன்னேறியவர்கள். அவர்கள் பெயர்கள்தான் வரலாற்றில் பொறிக்கப்படும்.

முடியாது என்பது முட்டாள்களின் அகராதி. முடியும் என்பது அறிவாளியின் மந்திரச் சொல். எதிலும் தயக்கம் கூடாது. அது நமது வாழ்க்கைப் பாதையில் தடைக்கல் ஆகும்.  தயங்கி நின்றால் வாழ்வில் பல வெற்றிகளை இழக்க நேரிடும். இந்தியா வல்லரசு ஆக, எதிர்காலம் உங்கள் கையில் உள்ளது. அதனைக் கருத்தில் கொண்டு வாழ்வில் வெற்றி பெற வேண்டும். இளைஞர்கள் அதிகம் படிக்க வேண்டும். அப்போது தான் அறிவு வளரும். வாசிப்பை அனைவரும் நேசிக்க வேதிண்டும் என்றார் அவர்.

நிகழ்ச்சியில் ராஜபாளையம் மக்கள் கல்வி நிறுவனத்தின் திட்ட மேலாளர் எஸ்.கிருஷ்ணசாமி, மாவட்ட பயிற்சியாளர் ஏ.ஆர்.ராஜ்குமார், மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் எம்.மதியழகன் உள்ளிட்டோர் கருத்தாளர்களாக கலந்து கொண்டு கருத்துரையாற்றினர்.

பயிற்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.