அம்பையில் பயங்கரம்: மனைவி, குழந்தைகள் உள்பட 5 பேரை சரமாரியாக வெட்டிய இளைஞர்
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் குடும்பத் தகராறில் மனைவி, மாமியார், மாமனார், குழந்தைகளை வெட்டிய இளைஞரை போலீஸார் தேடி வருகின்றனர்.


திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் குடும்பத் தகராறில் மனைவி, மாமியார், மாமனார், குழந்தைகளை வெட்டிய இளைஞரை போலீஸார் தேடி வருகின்றனர்.
அம்பாசமுத்திரம் அருகே பிரம்மதேசம் கிராமத்தை சேர்ந்தவர் வடிவேல் மகன் பிரமுகுட்டி (33). அம்பாசமுத்திரம் மேலப்பாளையம் தெருவை சேர்ந்தவர் சுந்தரசேகர் மகள் ராஜம் (25). இருவரும் 6 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர். இத்தம்பதிக்கு இஷ்யா (5), நாகேஸ்வரி (2) ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
கணவன், மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ராஜம் கணவனை பிரிந்து குழந்தைகளுடன் தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தாராம். செவ்வாய்க்கிழமை மாமனார் வீட்டுக்கு வந்த பிரமுகுட்டிக்கும் ராஜத்துக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாம்.
இந்நிலையில் புதன்கிழமை அதிகாலையில் ஐந்தரை மணிக்கு மாமனார் வீட்டுக்கு வந்த பிரமுகுட்டி, தான் வைத்திருந்த அரிவாளால் மனைவி ராஜம், மாமியார், மாமனார் சுந்தரசேகர் ஆகியோரை அரிவாளால் சரமாரியாக வெட்டினாராம். பின்னர் உறங்கி கொண்டிருந்த குழந்தைகளை அரிவாளால் வெட்டியும், காலால் உதைத்தும் தாக்கியுள்ளார்.
ராஜம், முத்துலட்சுமி ஆகியோருக்கு தலை, முகத்தின் தாடை பகுதியிலும், 2 குழந்தைகளுக்கு கழுத்து, முதுகுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ஐந்து பேருக்கும் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையி்ல் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டனர்.
குடும்பத் தகராறில் குடும்பத்தில் 5 பேரை இளைஞர் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்பாசமுத்திரம் காவல் ஆய்வாளர் குமார், வழக்குப் பதிந்து பிரமுகுட்டியை தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...