எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

நெல்லையப்பர் கோயில் அம்பாள் தேருக்கு கண்ணாடி இழைக் கூண்டு!

திருநெல்வேலியில் நெல்லையப்பர் கோயிலில் காந்திமதி அம்பாள் தேருக்கு ரூ. 10 லட்சம் மதிப்பில் கண்ணாடி இழை (பைபர் கிளாஸ்) கூண்டு அமைக்கப்பட்டது.

News image
Updated On :13 ஜூலை 2016, 1:32 pm

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலியில் நெல்லையப்பர் கோயிலில் காந்திமதி அம்பாள் தேருக்கு ரூ. 10 லட்சம் மதிப்பில் கண்ணாடி இழை (பைபர் கிளாஸ்) கூண்டு அமைக்கப்பட்டது.

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயிலில் சுவாமி, அம்பாள், விநாயகர், சுப்பிரமணியன், சண்டிகேஸ்வரர் என 5 தேர்கள் உள்ளன. ஆண்டுதோறும் ஆனிப் பெருந்திருவிழாவையொட்டி தேரோட்டம் விமர்சையாக நடைபெறுகிறது.

இந்த 5 தேர்களும் தகரத்தினால் ஆன கூண்டு அமைத்து மூடப்பட்டுள்ளது. திருவிழா நடைபெறும்போது, தகரக் கொட்டகை அகற்றப்பட்டு பின்னர் மூடப்படுவதுண்டு.
தகரக் கொட்டகையால் தேர்கள் மூடப்பட்டுள்ளதால் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் தேர்களை கண்டு களிக்க முடியாத நிலை இருந்தது.

பிரசித்திப் பெற்ற கோயில்களிலுள்ள தேர்களை இந்துசமய அறநிலையத்துறை சார்பில் கண்ணாடி இழை (பைபர் கிளாஸ்) கூண்டு அமைத்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. 
இதன்படி திருநெல்வேலி நகரிலுள்ள அருள்மிகு நெல்லையப்பர் கோயிலில் காந்திமதி அம்பாள் தேரை ரூ. 9 லட்சத்து 98 ஆயிரத்து 475 மதிப்பில் கண்ணாடி இழைக் கூண்டு அமைக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.
திருமங்கலம் வேளாண்மை பொறியியல் கூட்டுறவு மையப் பணியாளர்கள் கண்ணாடி  இழைக் கூண்டு அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். தேரின் 3 புறங்களில் கண்ணாடி இழையால் ஆனச் சட்டங்களும், பின்புறத்தில் தகர சட்டங்கள் மூலம் முழுவதும் மறைக்கப்படுகிறது.

இதன் மூலம் பக்தர்கள், வெளியூர்களிலிருந்து வருகை தரும் பக்தர்கள் அம்பாள் தேரை கண்ணாடி இழை கூண்டு வழியாக பார்வையிடலாம். பக்தர்கள் தேரின் உட்பகுதிக்கு சென்று பார்வையிடும் வகையில் 5 அடி உயரத்தில் கதவு அமைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.