எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மீன் அரவை ஆலையினால் விவசாயம் அழியும் அபாயம்: நெல்லையில் கிராம மக்கள் புகார்

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் அருகே செயல்படும் மீன் அரவை ஆலையினை நிலத்தடி நீர் சுவை மாறுகிறது. விவசாயம் அழிந்து வருவதாக புகார் தெரிவித்து குறை தீர்க்கும் கூட்டத்தில் கிராம மக்கள் புகார் மனு அளித்தனர்.

News image
Updated On :18 ஜூலை 2016, 8:59 am

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் அருகே செயல்படும் மீன் அரவை ஆலையினை நிலத்தடி நீர் சுவை மாறுகிறது. விவசாயம் அழிந்து வருவதாக புகார் தெரிவித்து குறை தீர்க்கும் கூட்டத்தில் கிராம மக்கள் புகார் மனு அளித்தனர்.

ராதாபுரம் வட்டம், வள்ளியூர் ஒன்றியம், இருக்கன்துறை ஊராட்சியில் 4 தனியார் மீன் அரவை ஆலைகள் இயங்கி வருகிறது. இந்த ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகளால் துர்நாற்றம் வீசுகிறது. கழிவுகளை கிணறுகளில் தேக்கி வைத்து பின்னர் வெளியேற்றப்படுகிறது.
கழிவுகளிலிருந்து வெளியாகும் ஒரு வித நச்சு வாயு, நச்சு கழிவுகள் அப்பகுதியில்
வசிக்கும் கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பல்வேறு கிராமங்களுக்கு குடிநீர் வழங்கும் குளம், நீர்நிலைகளில் கலப்பதால் நிலத்தடி நீர் ஆதாரம் மாசுபட்டு வருகிறது.

மாசுபட்ட குடிநீரை பயன்படுத்துவதால் வயிற்றுப் போக்கு, காய்ச்சல், தோல்நோய் போன்ற நோய்களால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மீன் அரவை ஆலையை மூட வேண்டும் என வலியுறுத்தி இருக்கன்துறை ஊராட்சியில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

உப்பு கலந்த கழிவுநீரால் அப்பகுதியில் பாசன நிலங்களில் விவசாயம் செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது. இதேநிலை நீடித்தால் ராதாபுரம் வட்டத்தில் விவசாயம் அழியும் அபாயம் உள்ளது.

இந்த ஆலையை அகற்ற வலியுறுத்தி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம், மறியல் என பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இருக்கன்துறை, செட்டிகுளம், தனக்கர்குளம், அடங்கன்குளம் ஆகிய 4 ஊராட்சிகளுக்கு உட்பட 50 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் நலன் கருதியும், விவசாயத்தை காப்பாற்றும் வகையில் இங்குள்ள தனியார் மீன் அரவை ஆலையை மூட வேண்டும் என கிராம மக்கள்
மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் புகார் மனு அளித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.