எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

அடவிநயினார் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 9 அடி உயர்வு!

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் மழையால் ஒரே நாளில் அடவிநயினார் அணை நீர்மட்டம் 9 அடியும், பாபநாசம் அணை நீர்மட்டம் 3 அடியும் உயர்ந்துள்ளது.

News image
Updated On :10 ஜூன் 2016, 12:02 pm

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி: மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் மழையால் ஒரே நாளில் அடவிநயினார் அணை நீர்மட்டம் 9 அடியும், பாபநாசம் அணை நீர்மட்டம் 3 அடியும் உயர்ந்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் மழை நீடித்து வருகிறது. வெள்ளிக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை (மில்லி மீட்டரில்): பாபநாசம் அணை-30, பாபநாசம் கீழ் அணை-11, சேர்வலாறு அணை-3, மணிமுத்தாறு அணை-6, கடனாநதி அணை-15, ராமநதி அணை-3, கருப்பாநதி அணை-4, குண்டாறு அணை-42, அடவிநயினார் அணை-20, கொடுமுடியாறு அணை-17, கன்னடியன் அணைக்கட்டு-2, தென்காசி-6, ஆய்க்குடி-6.2, ஆலங்குளம் 1.4.

நீர்ப்பிடிப்புப் பகுதியில் சில தினங்களாக நீர்ப்பிடிப்புப் பகுதியில் நீடித்து வரும் மழையால் பிரதான அணைகளின் நீர்வரத்து கணிசமாக உயர்ந்து நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 2126.69 கனஅடி, மணிமுத்தாறு அணைக்கு 664 கனஅடி, சேர்வலாறு அணைக்கு 800 கனஅடி, கடனாநதி அணைக்கு 128 கனஅடி, ராமநதி அணைக்கு 25.60 கனஅடி, குண்டாறு அணைக்கு 15 கனஅடி, அடவிநயினார் அணைக்கு விநாடிக்கு 97 கனஅடி, கொடுமுடியாறு அணைக்கு 57 கனஅடியும் நீர்வரத்து இருந்தது.

பாபநாசம் அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்து 79 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 104.49 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 73.95 அடியாகவும், கடனாநதி அணையின் நீர்மட்டம் 4 அடி உயர்ந்து 40 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 37 அடியாகவும் இருந்தது.

இதேபோல், அடவிநயினார் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 9 அடி உயர்ந்து 49 அடி, கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 5 அடி உயர்ந்து 13 அடி, குண்டாறு அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 24 அடி, கருப்பாநதி அணை நீர்மட்டம் 24.94 அடி, நம்பியாறு அணையின் நீர்மட்டம் 12.76 அடியாகவும் இருந்தது.

பாசனத்துக்கு பாபநாசம் அணையில் இருந்து 500 கனஅடி, மணிமுத்தாறு அணையில் இருந்து 45 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதை அடுத்து கன்னடியன் கால்வாய் பாசனத்துக்கு வெள்ளிக்கிழமை தண்ணீர் திறக்கப்பட்டது. அணைகளிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதை அடுத்து சாகுடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.