மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

மனதளவில் திமுகவில் இணைந்துவிட்டேன்: பழ. கருப்பையா

மனதளவில் திமுகவில் இணைந்துவிட்டதாக சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் பழ. கருப்பையா கூறினார்.

Updated On :19 ஜூன் 2016, 4:22 am IST

மனதளவில் திமுகவில் இணைந்துவிட்டதாக சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் பழ. கருப்பையா கூறினார்.

கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வியாழன் வரை ரோமாபுரி பாண்டியன் என்ற வரலாற்றுத் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் நடித்த நடிகர்-நடிகைகளுக்கான பாராட்டு விழா சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிமுகவிலிருந்து விலகி எந்தக் கட்சியிலும் சேராமல் இருந்து வந்த சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் பழ. கருப்பையா கலந்துகொண்டார்.

விழாவில் அவர் பேசுகையில், "சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணியை திமுக இன்னும் வலிமையாக அமைத்திருந்தால் நிச்சயம் வெற்றி பெற்றிருக்கும்' என்றார்.

இதைத் தொடர்ந்து திமுக தலைவர் கருணாநிதி பேசியபோது, "பழ.கருப்பையா போன்றவர்கள் திமுகவை வலுப்படுத்த வேண்டும்' என்றார்.

இதையடுத்து நிகழ்ச்சி முடிந்த பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய பழ கருப்பையா, "திமுக தலைவர் கருணாநிதியின் அழைப்பை ஏற்று மனதளவில் திமுகவில் இணைந்து விட்டேன்' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.