பண்ருட்டியில் யாகசாலை பூஜையுடன் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு
பண்ருட்டி சட்டமன்ற அலுவலகம் யாகசாலை பூஜையுடன் திங்கள்கிழமை திறக்கப்பட்டது. அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சத்தியா பன்னீர் செல்வம் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.


நெய்வேலி: பண்ருட்டி சட்டமன்ற அலுவலகம் யாகசாலை பூஜையுடன் திங்கள்கிழமை திறக்கப்பட்டது. அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சத்தியா பன்னீர் செல்வம் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.
அண்மையில் நடந்துமுடிந்த சட்டப்பேறவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சத்தியா பன்னீர்செல்வம் வெற்றி பெற்றார். இதையடுத்து, இன்று காமராஜர் நகரில் உள்ள அலுவலகத்தில் சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டது.
நகரமன்ற தலைவர் பன்னீர் செல்வம், வட்டாட்சியர் வீரா மற்றும் அரசு அதிகாரிகள், அதிமுக நிர்வாகிகள், வியாபாரிகள், ஊர் முக்கியஸ்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். அப்போது பொதுமக்களிடம் இருந்து சட்டபேரவை உறுப்பினர் கோரிக்கை தொடர்பான மனுக்களை அளித்தனர். அவர் அதை பெற்றுகொண்டர்.
அப்போது சத்தியா பன்னீர் செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது....
1996 முதல் செயல்பாடற்று பூட்டி கிடந்த பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் மக்கள் நலம் கருதும் அலுவலகமாக இனி செயல்படும். சட்டபேரவை கூட்டம் நடைபெறும் நாட்கள், அரசு பணிகளில் கலந்துகொள்ளும் நாட்கள், ஞாயிற்றுக்கிழமை தவிர வாரத்தில் உள்ள அனைத்து நாட்களும் அலுவலகத்தில் என்னை நேரில் சந்தித்து தொகுதி சார்ந்த கோரிக்கைகளை மக்கள் அளிக்கலாம்.
அனைத்து மனுக்களின் செயல்பாடுகளும் தமிழக முதல்வரின் ஆணைப்படி தொடர்புடைய ஆணையருக்கு அளிக்கப்பட்டு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அவசர பணி நிமித்தம் காரணமாக அலுவலகத்திற்கு வர இயலாத நாட்களில் அலுவலகத்தில் நியமணம் செய்யப்பட்டுள்ள உதவி ஆனையரிடம் மனுக்களை அளிக்கலாம். சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், அரசு அலுவலகம் போலவே முறையாக செயல்படும். நேரில் வர இயலாதவர்கள் தங்கள் கோரிக்கைகளை 9842322552 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என்று சத்தியா பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...