சட்டப் பேரவைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணிக்கு ஆதரவு இல்லை என்று காந்திய மக்கள் கட்சித் தலைவர் தமிழருவி மணியன் கூறினார்.
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் வெள்ளிக்கிழமை அவர் நிருபர்களிடம் கூறியது:
காந்திய மக்கள் இயக்கமும், அப்துல் கலாம் லட்சிய இந்தியக் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ளன. காந்திய மக்கள் இயக்கம் 25 தொகுதிகளிலும், மீதம் உள்ள 209 தொகுதிகளில் அந்தக் கட்சி போட்டியிடும். எனவே, மக்கள் நலக் கூட்டணி உள்ளிட்ட எந்தக் கூட்டணியிலும் அங்கம் வகிக்க வாய்ப்பில்லை என்றார்.
இதையடுத்து, அப்துல் கலாமின் முன்னாள் ஆலோசகர் பொன்ராஜ் பேசியது: "அப்துல் கலாம் லட்சிய இந்தியா' அமைப்பின் ஆலோசகராக உள்ளேன். கட்சியினர் விருப்பப்பட்டால் தலைமை ஏற்கவும் தயாராக உள்ளேன். கலாம் பெயரில் கட்சி தொடங்குவதற்கு அவரின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்பது உண்மை.
காந்தி, அண்ணா, பெரியார், அம்பேத்கர் பெயரில் எல்லாம் கட்சி உள்ளது. அப்துல்கலாம் பொது மனிதர். அவரது பெயரை வைத்து இளைஞர்கள் ஒன்றிணைந்துள்ளனர். என் சொந்த ஆதாயத்துக்காக அவர் பெயரைப் பயன்படுத்தவில்லை. அவரை தலைவராக ஏற்றுக் கொண்ட மாணவர்களை ஒருங்கிணைக்க, அவர் கண்ட கனவை நனவாக்கவே கட்சி தொடங்கப்பட்டுள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சம்பா பருவத்துக்கு ஏற்ற தரமான விதைகளை விற்க வேண்டும்: தனியாா் விதை விற்பனையாளா்களுக்கு அறிவுறுத்தல்
ஆட்டோ கவிழ்ந்து பயணி உயிரிழப்பு

3 தமிழா்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து தவாகவினா் ஆா்ப்பாட்டம்
தந்தை கத்தியால் வெட்டிக் கொலை: மகன் கைது
விடியோக்கள்
“பாஜகவின் குழந்தை தவெக”: திமுக மருது அழகுராஜ் விமர்சனம்



