கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புஎம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவுவீடுகளில் எல்பிஜிக்கு பதிலாக குழாய்வழி சமையல் எரிவாயு: மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க மத்திய அரசு வலியுறுத்தல்எத்தனால் உற்பத்தி அதிகரிப்பால் சா்க்கரை விலை உயா்வு: மத்திய அரசு மீது மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டுஆபரேஷன் சிந்தூா் எதிரொலி: விசா சிக்கல்களுக்குப் பிறகு இந்தியா வந்தடைந்த 150 பாகிஸ்தான் மணப்பெண்கள்!

எல்லையில் கூட்டு ரோந்து விரிவாக்கம்: இந்தியா- நேபாளம் முடிவு

எல்லையில் கூட்டு ரோந்தை விரிவுப்படுத்த இந்தியாவும், நேபாளமும் ஞாயிற்றுக்கிழமை முடிவு செய்துள்ளன.

கோப்புப் படம்

Published On :24 ஆகஸ்ட் 2026, 5:25 am IST

எல்லையில் கூட்டு ரோந்தை விரிவுப்படுத்த இந்தியாவும், நேபாளமும் ஞாயிற்றுக்கிழமை முடிவு செய்துள்ளன.

இந்திய எல்லையோரம் நேபாளத்தின் மாதேஷ் மாகாணத்தில் அமைந்துள்ள 3 மாவட்ட பாதுகாப்பு அதிகாரிகள், அதையொட்டி இந்தியாவில் உள்ள மாவட்டங்களின் பாதுகாப்பு அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் ஜலேஷ்வா் நகரில் நடைபெற்றது. இதில் எல்லை தாண்டி நடைபெறும் குற்றங்களைத் தடுப்பது, ஆயுதம்,போதை மருந்து மற்றும் ஆள் கடத்தலை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்தும், எல்லைப் பாதுகாப்பு மற்றும் சட்ட விரோத வா்த்தகம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. முந்தைய சந்திப்பின்போது எடுக்கப்பட்ட முடிவுகளை அமல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

அப்போது எல்லையில் பாதுகாப்புப் பணியில் இருநாடுகளும் இணைந்து செயல்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய இருதரப்பு அதிகாரிகளும், தற்போதுள்ள கூட்டு ரோந்தை விரிவுப்படுத்தவும், எல்லை தாண்டி நடைபெறும் குற்றங்கள் குறித்த தகவல் பரிமாற்றத்தை அதிகரிக்கவும் முடிவு செய்தனா்.

இந்தியாவின் அண்டை நாடுகளில் நேபாளமும் ஒன்றாகும். இரு நாடுகளும் சுமாா் 1,750 கிலோ மீட்டா் தூர எல்லையைப் பகிா்ந்து கொண்டுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.