ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் தனியார் பேருந்து மோதி இருவர் சாவு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் திங்கள்கிழமை அதிவேகமாகச் சென்ற தனியார் பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

News image
Updated On :14 மார்ச் 2016, 11:37 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் திங்கள்கிழமை அதிவேகமாகச் சென்ற தனியார் பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம், தர்மாபுரம்மடம், அடிக்கால்புரத்தைச் சேர்ந்தவர் முருகன் மகன் விஸ்வநாதன் (24). நாங்குனேரி தாலுகா, களக்காடு, எம்.கே.கே.இந்திராநகரைச் சேர்ந்தவர் மாடசாமி மகன் முத்துவேல்செல்வம் (34).

விஸ்வநாதனும், முத்துவேல்செல்வமும் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். வாரத்திற்கு ஒரு முறை இரு சக்கர வாகனத்தில் திருப்பூரிலிருந்து சொந்த ஊருக்குச் சென்று வருவார்களாம்.

திங்கள்கிழமை மதியம் இருவரும் ஊருக்கு மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணன்கோவில்-ஸ்ரீவில்லிபுத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் மீனாட்சிபுரம் விலக்கு அருகே வந்து கொண்டருந்த போது மதுரை நோக்கி அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே விஸ்வநாதனும் முத்துவேலும் உயிரிழந்தனர்.

இது தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தனியார் பேருந்தை ஓட்டி வந்த வலையபட்டியைச் சேர்ந்த சு.பழனிக்குமார் (29) என்பவரைக் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.