ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

பெண் மருத்துவர் மீது தாக்குதல்: ஸ்ரீவிலி. அரசு மருத்துவர் மீது வழக்கு

பெண் மருத்துவரான தனது மனைவியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக அவரது கணவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவருமான ஜெகநாத்பிரபு உள்ளிட்ட மூவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு

News image
Updated On :16 மார்ச் 2016, 1:05 pm

கோ.ஜெயக்குமார்

பெண் மருத்துவரான தனது மனைவியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக அவரது கணவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவருமான ஜெகநாத்பிரபு உள்ளிட்ட மூவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவர்களைத் தேடி வருகிறார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர், வன்னியம்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் குடியிருந்து வருபவர் டாக்டர் கல்பனா (33). இவருக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சன்னதி தெருவைச் சேர்ந்த டாக்டர் மனோகரன் என்பவரின் மகன் டாக்டர் ஜெகநாத்பிரபு என்பவருக்கும் 2008-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. ஜெகநாத்பிரபு தற்போது ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் மருத்துவராக உள்ளார்.

2013-ம் ஆண்டு டிசம்பர் முதல் கல்பனா, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எம்.டி. படித்து வருகிறார்.

டாக்டர் ஜெகநாத்பிரபு வீட்டில் இருந்த தனது மனைவியை பிடித்து வெளியே தள்ளி கதவைப் பூட்டியுள்ளார். இதனால் திருநெல்வேலியில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு கல்பனா சென்று விட்டார். இந்நிலையில் ஜெகநாத்பிரபு விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ளார். அது தள்ளுபடியாகிவிட்டதாம்.

மார்ச் 11-ம் தேதி கல்லூரியில் 1 மாதம் விடுமுறை எடுத்துக் கொண்டு, வன்னியம்பட்டி வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் உள்ள கணவர் வீட்டிற்கு கல்பனா வந்துள்ளார். இவருடன் கல்பனாவின் அண்ணன் மனைவி ஜெபா (37) என்பவரும், அக்காள் மகன் சக்தி மகாராஜவும் இருந்துள்ளார்கள். மூவரும் புதன்கிழமை காலை தூங்கிக் கொண்டிருந்தபோது வீட்டிற்குள் டாக்டர் ஜெகநாத்பிரபு இவரது அண்ணன் சுரேஷ், தாய் சீனியம்மாள் ஆகியோர் அத்துமீறி நுழைந்து, கல்பனாவை ஆபாசமாகப் பேசி கட்டையால் அடித்து கீழே தள்ளியுள்ளார்கள். தடுத்த ஜெபாவிற்கும் அடி விழுந்துள்ளது. காயமுற்ற இருவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் வீட்டிலிருந்து சேர், செல்போன் உள்ளிட்டவைகளை உடைத்தும் கார் கண்ணாடிகளை உடைத்தும் ரகளையில் ஈடுபட்டுள்ளார்கள். இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் கல்பனா புகார் செய்தார். போலீஸார் சுரேஷ், டாக்டர் ஜெகநாத்பிரபு இவர்களின் தாய் சீனியம்மாள் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து இவர்களைத் தேடி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.