பணம் கொடுத்தால்தான் வேலை என்பதில் திமுக, அதிமுக சமம்: முத்தரசன்
சத்துணவு சமையலர் வேலை முதல் அனைத்து அரசு வேலைகளுக்கும் பணம் கொடுக்க வேண்டும் என்பதில் திமுக, அதிமுகவுக்கு வேறுபாடு இல்லை


சத்துணவு சமையலர் வேலை முதல் அனைத்து அரசு வேலைகளுக்கும் பணம் கொடுக்க வேண்டும் என்பதில் திமுக, அதிமுகவுக்கு வேறுபாடு இல்லை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறினார்.
விருதுகநர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
திமுக, அதிமுக ஆட்சிகளில் இரக்கமற்ற முறையில் வேலைகளுக்கும், பணியிட மாறுதல்களுக்கும் பணம் பெறுகிறார்கள். இது எழுதப்படாத சட்டமாக உள்ளது.
கிரானைட் முறைகேடு 20 ஆண்டுகளாக நடைபெற்றுள்ளது என்றும் இதனால் அரசுக்கு ஆயிரம் ரூபாய் கோடி இழப்பு என்றும் சகாயம் அறிக்கையில் கூறியுள்ளார். அன்றாட பிரச்னைகளுக்கு தினமும் பத்திரிக்கைகளில் செய்தியும் அறிக்கையும் கொடுக்கும் திமுக தலைவர் கருணாநிதி இது விஷயத்தில் மௌனம் காக்கிறார். அவரிடம் இருந்து எந்த பதிலும் பெறமுடியவில்லை. முதல்வர் ஜெயலலிதாவும் மௌனம் காக்கிறார்.
உடுமலைப்பேட்டை அருகே காதல் விவகாரத்தில் தலித் இளைஞர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து பெரியாரின் சீடர் என்றும், ஆதிதிராவிடர்கள் தனது சம்பந்தி என்றும் கூறும் கருணாநிதி இதற்கு கருத்து தெரிவிக்கவில்லை. சில நாட்கள் கழித்து பெயர் அளவிற்கு அறிக்கை வெளியிடுகிறார். தமிழக முதல்வர் மௌனம் காக்கிறார்.
இந்தியாவில் லஞ்சம் ஊழலில் தமிழகம் முதல் மாநிலமாக உள்ளது. இதில் திமுக அதிமுக விற்கு வேறுபாடு கிடையாது.
தமிழகத்தில் மூத்த அமைச்சர்களான ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன் ஆகியோரின் ஊழல்கள் குறித்து பத்திரிக்கைகளில் செய்திகள் வருகின்றன. அமைச்சரின் உதவியாளர் கைது செய்யப்படுகிறார். இதற்கு அமைச்சர்களோ, முதல்வரோ பதில் சொல்லாதது வியப்பாக, ஆச்சரியமாக உள்ளது.
இம் மாதம் 26-ம் தேதி திருச்சியில் மக்கள் நலக் கூட்டணி கட்சிகளின் வழக்குரைஞர்களுக்கான ஒரு நாள் மாநாடு நடைபெறுகிறது. இதில் வழக்குரைஞர்களின் தேர்தல் பங்கு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்படும்.
மக்கள் நலக் கூட்டணியில் உள்ள கட்சிகள் பிரியாது. தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றார் முத்தரசன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...