திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அகதிகள் சிறப்பு முகாம் உள்ளது. அதில் தயாபரராஜ் உள்ளிட்ட 16-க்கும் மேற்பட்ட அகதிகள் பல்வேறு வழக்குகளில் கைதாகியுள்ளனர்.
இவர்களை விடுவிக்க வேண்டி மக்கள் நலக் கூட்டணி சார்பில் சிறை முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இன்று காலை, மக்கள் நலக் கூட்டணி உறுப்பினர்கள் பேரணியாக சிறை வளாகத்தில் நுழைய முயன்றனர். இவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இதனால், அருகாமையில் உள்ள திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த மறியல் போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் செயலாளர் ராஜா தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது.
மேலும், இந்த மறியல் போராட்டத்தில் கலந்துகொண்ட இந்திய கம்யூனிஸ்ட் மாநகர செயலாளர் சுரேஷ், மதிமுக செயலாளர் வெள்ளமண்டி சோமு, விடுதலைச் சிறுத்தை செயலாளர் அருள் உள்ளிட்ட 53 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் மூன்று பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பணமோசடி வழக்கு: ஐ-பேக் இயக்குநர் வினேஷ் சண்டேலுக்கு ஜாமீன்!

திருப்பத்தூரில் மறுவாக்குப்பதிவு கோரிய மனு தள்ளுபடி!

ஆட்சியைப் பிடிக்கும் தவெக? ஆக்சிஸ் மை இந்தியா கணிப்புகளை நம்பலாமா.?

டிரெண்டில் இணையுங்கள்! நாசா படங்கள் மூலம் பெயரை உருவாக்குவது எப்படி?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

