என்.எல்.சி. சுரங்கத்தில் தாமிரக் கம்பி திருடியவர் கையும் களவுமாக பிடிபட்டார்
நெய்வேலி சுரங்கப்பகுதியில் தாமிரக் கம்பி திருடிய இளைஞரை தெர்மல் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.


நெய்வேலி சுரங்கப்பகுதியில் தாமிரக் கம்பி திருடிய இளைஞரை தெர்மல் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
நெய்வேலி, என்எல்சி சுரங்கம்-1, ஆர்.ஆர். யார்டு பகுதியில் சிஐஎஸ்எப் காவலர் சோனிக்குமார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். செவ்வாய்க்கிழமை அதிகாலை ஆர்.ஆர். யார்டு பகுதியில் இருந்து 17 மீட்டர் தாமிரக் கம்பியை திருடியதாக ஒருவரை பிடித்து தெர்மல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
போலீஸார், அவரிடம் விசாரணை நடத்தியதில் தாண்டவன்குப்பம் பெரியண்ணன் மகன் பெரியசாமி(28) என்பது தெரியவந்தது. பின்னர் அவரை கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...