பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மீன் உணவு சாப்பிட்ட முதியவர் பரிதாப சாவு: மேலும் 4 பேர் மருத்துவமனையில் அனுமதி

பண்ருட்டி அடுத்துள்ள குடிமீயாகுப்பம் காலணியைச் சேர்ந்தவர் பெருமாள் (87). இவர் நேற்று மீன் உணவு சாப்பிட்டதால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :7 நவம்பர் 2016, 7:00 am

பண்ருட்டி ஸ்ரீனிவாசன்

நெய்வேலி: பண்ருட்டி அடுத்துள்ள குடிமீயாகுப்பம் காலணியைச் சேர்ந்தவர் பெருமாள் (87). இவர் நேற்று மீன் உணவு சாப்பிட்டதால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குடிமீயாகுப்பம் காலணியில் வசித்து வரும் பெருமாளின் வீட்டில், நேற்று தெருவில் விற்பனை செய்த மீன்களை வாங்கியுள்ளனர். மீனின் வயிற்றில் இருந்த தெனை (மீன் முட்டை) தனியாக எடுத்துச் சமைத்து சாப்பிட்டுள்ளனர். இதனால், பெருமாள் உள்ளிட்ட குடும்பத்தினர் 5 பேர் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. உடனே, அருகில் உள்ளவர்கள் இவர்களை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். அவர்களுக்கு அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, உயர் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால், அங்கு முதியவர் பெருமாள் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அவர் குடும்பத்தைச் சேர்ந்த இந்திரா, நாகாம்மள் விழுப்புரம் மாவட்டம் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் நாராயணசாமி, வள்ளியம்மாள் ஆகிய இருவரும் புதுச்சேரி மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால், அப்பகுதியில் இச்சம்பவம் பெரும் பீதியைக் கிளப்பியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.