மனைவி தற்கொலை: கணவருடன் பழகிய தலைமை பெண் காவலர் பணியிடை நீக்கம்
கடலூரில் பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவரது கணவருடன் தகாத உறவு வைத்திருந்த பெண் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


பண்ருட்டி: கடலூரில் பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவரது கணவருடன் தகாத உறவு வைத்திருந்த பெண் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் அருகே வசித்து வருபவர் செல்வக்குமார். ஒப்பந்ததாரராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ராஜலட்சுமி
செல்வக்குமாருக்கும், தலைமைப் பெண் காவலர் ஒருவருக்கும் இடையே தொடர்பு இருந்தது தெரிய வந்ததைத் தொடர்ந்து ராஜலட்சுமி கணவரை கண்டித்துள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் கணவரின் நடத்தை பிடிக்காமல் கோபித்துக் கொண்டு நெய்வேலியில் உள்ள தந்தை வீட்டுக்கு வந்திருந்த ராஜலட்சுமி, கடந்த மாதம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலைக்கு முன்பு அவர் எழுதிய கடிதத்தில், கணவர் செல்வக்குமாருக்கும், பெண் காவலர் ஒருவருக்கும் இடையே தகாத உறவு இருப்பதால் தற்கொலை செய்து கொள்வதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்குத் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் நடத்திய விசாரணையில் செல்வக்குமாருக்கும், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொருளாதார குற்றப்பிரிவின் தலைமைக் காவலராக பணியாற்றி வரும் மணிமொழி என்பவருக்கும் இடையே தகாத உறவு இருந்ததது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மணிமொழியை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல்கண்காணிப்பாளர் விஜயகுமார் உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...