பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கடலூர்: வங்கிகளில் நீண்ட வரிசையில் மக்கள்; சிறப்பு ஏற்பாடுகள் இல்லை

கடலூரில் உள்ள வங்கிகளில் காலை முதலே ஏராளமான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பழைய ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து புதிய ரூபாய் நோட்டுக்களை வாங்கிச் சென்றனர்.

News image
Updated On :10 நவம்பர் 2016, 6:29 am

சீனிவாசன்


பண்ருட்டி: கடலூரில் உள்ள வங்கிகளில் காலை முதலே ஏராளமான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பழைய ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து புதிய ரூபாய் நோட்டுக்களை வாங்கிச் சென்றனர்.

அனைத்து வங்கிகளிலும் நீண்ட வரிசையில்பொதுமக்கள் காத்திருந்தனர். பணம் செலுத்தவும், பெறுவதற்கும் ஏராளமானோர் காத்திருக்கின்றனர்.

ஆனால், பொதுமக்களின் வசதிக்காக வங்கிகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யவில்லை என்று குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.

சில வங்கிகளில் பெண்களுக்கு, ஆண்களுக்கு என தனி வரிசை அமைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான வங்கிகளில் இரு தரப்பினருக்கும் ஒரே வரிசைதான் பின்பற்றப்படுகிறது.

ஆனால் வங்கிகளுக்கு இன்னமும் ரூ.2000 ரூபாய் நோட்டுக்கள் வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளும் இதே நீண்ட வரிசையில் நிற்க வேண்டியிருப்பதால் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.