பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பண்ருட்டி இந்தியன் வங்கிக்கு புதிய ரூபாய் நோட்டுகள் வரவில்லை: பொதுமக்கள் அவதி

பண்ருட்டியில் உள்ள இந்தியன் வங்கிக்கு 2000 ரூபாய் நோட்டுக்கள் வராததால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

News image
Updated On :10 நவம்பர் 2016, 6:37 am

சீனிவாசன்


பண்ருட்டி: பண்ருட்டியில் உள்ள இந்தியன் வங்கிக்கு 2000 ரூபாய் நோட்டுக்கள் வராததால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

வங்கியில் ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். ஆனால், அவர்களிடம் விண்ணப்பத்தைக் கொடுத்து பணத்தை டெபாசிட் செய்ய மட்டுமே வழி சொல்கிறார்கள்.

வங்கிக்கு இன்னமும் புதிய ரூபாய் நோட்டுக்கள் வராததால், பொதுமக்கள் பணத்தை டெபாசிட் செய்ய சொல்வதால், அத்தியாவசிய செலவுக்கு பணம் இல்லாமல் மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளார்.

இதற்கிடையே நகைக் கடை  மற்றும் துணிக் கடையில் பொதுமக்களின் சூழ்நிலையை புரிந்து கொண்டு வீட்டு விசேஷங்கள் தடைபடக் கூடாது எனப்தால் பழைய ரூபாய் நோட்டுக்களைப் பெற்றுக் கொள்வதாக கடை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

ஆனால், வங்கிக் கணக்கு இல்லாத காய்கறி மற்றும் இதர வணிகக் கடைக்காரர்கள் பழைய ரூபாய் நோட்டுக்களைப் பெற்றுக் கொள்ளாததால் வியாபாரம் மந்தம் அடைந்துள்ளது.

ஏடிஎம் முடங்கியதால் கடலூரில் பல கோடி ரூபாய் பண பரிவர்த்தனை முடங்கியது.

பண்ருட்டி வெளிநாடுகளில் முந்திரி பயிர் ஏற்றுமதி செய்து அன்னிய செலாவணி  ஈட்டும் மையமாக விளங்குவதால் இங்கு பெரிய அளவில் வணிக இழப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.