நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

விவசாயிகளுக்கு பயிர் கடனாக ரூ.3000 கோடி: அருண் ஜேட்லியிடம் அதிமுக எம்பிக்கள் வேண்டுகோள்!

விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலமாக பயிர் கடனாக ரூ.3000 கோடி வழங்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியிடம் அதிமுக எம்பிக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

News image
Updated On :23 நவம்பர் 2016, 9:01 am

DIN

புதுதில்லி: விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலமாக பயிர் கடனாக ரூ.3000 கோடி வழங்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியிடம் அதிமுக எம்பிக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அதிமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இன்று  காலை நாடளுமன்ற வளாகத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியை , நாடாளுமன்ற துணைசபாநாயகர் தம்பிதுரை தலைமையில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில் அவர்கள் தெரிவித்திருந்தாவது:

விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலமாக பயிர் கடனாக ரூ.3000 கோடி வழங்க வேண்டும்.

ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட விவகாரத்தில் விவசாயிகள் அடைந்த பாதிப்புகளை  நிவர்த்தி செய்யய வேண்டும்.

விவசாயிகள் தங்கள் வாங்கியுள்ள விவசாய கடன்களை திருப்பி செலுத்தும் போது பழைய ரூபாய் நோட்டுகளை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.

வர்த்தக வங்கிகளில் உள்ளதைப் போன்று கூட்டுறவு வங்கிகளும் டெபாசிட் தொகைகளை பெறுவதற்கு அனுமதிக்க வேண்டும்.  

இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.