குடும்ப வன்முறையில் இருந்து பெண்களை மீட்கும் 'நிறுத்துடா'
பெண்களை குடும்ப வன்முறையில் இருந்து மீட்பதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் புதிய குழுவின் ஸ்லோகனே 'நிறுத்துடா' என்பதுதான்.


சென்னை: பெண்களை குடும்ப வன்முறையில் இருந்து மீட்பதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் புதிய குழுவின் ஸ்லோகனே 'நிறுத்துடா' என்பதுதான்.
தனது சொற்ப ஊதியத்தைக் கொண்டு குடும்பத்தையும் குழந்தைகளையும் பாதுகாக்க போராடிக் கொண்டிருக்கும் பெண்களை, அவர்களது குடிகாரக் கணவர்களின் வன்முறையில் இருந்து மீட்கும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்த உருவாக்கப்பட்டிருக்கிறது ஒரு குழு. அந்த குழுவின் முக்கிய கோஷமே நிறுத்துடா என்பதுதான்.
பொதுவாக பெண்களுக்கு எதிரான வன்முறை என்பது, குடும்பம், அலுவலகம், சமூக தளங்கள் என பல வழிகளில் அதிகரித்து உள்ளது.
சர்வதேச பெண்களுக்கு எதிராக குற்றங்களைத் தடுத்தல் தினத்தை முன்னிட்டு லாப நோக்கற்ற அமைப்பான கருணாலயாவால் பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்த மீன்களுக்கு பிரசித்தி பெற்ற காசிமேடு பகுதி தேர்வு செய்யப்பட்டது.
அப்பகுதியின் காவல்துறை ஆய்வாளர் தாம்சன் ஸேவியர் இது குறித்து கூறுகையில், பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களை தடுக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு 'நிறுத்துடா' என்று பெயரிடப்பட்டுள்ளது.
இப்பகுதியில், 8 அல்லது 9 வயது சிறார்கள் கூட மது போதைக்கும் கஞ்சாவுக்கும் அடிமையாகும் நிலை உள்ளது. அதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறுகிறார்.
இந்த குழுவினர், பெண்களுக்கு எதிராக வன்முறையை நிறுத்துவது தொடர்பாக பல்வேறு முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர். நிறுத்துடா என்ற ஸ்லோகனுடன் தொடங்கிய இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, கையெழுத்து இயக்கத்துடன் நிறைவு பெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...