ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

பல்வேறு விதமான வங்கி சேவைகளுக்காக நாளை முதல் தமிழகத்தில் சிறப்பு முகாம்

ஆதார் அட்டை இணைப்பு மற்றும் ரூபே கார்டு வினியோகம் உள்ளிட்ட சிறப்பு வங்கி சேவைகளுக்காக அனைத்து வங்கிகளிலும் நாளை முதல் டிசம்பர்-2 ஆம் தேதிவரை சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :27 நவம்பர் 2016, 8:19 am

DIN

சென்னை: ஆதார் அட்டை இணைப்பு மற்றும் ரூபே கார்டு வினியோகம் உள்ளிட்ட சிறப்பு வங்கி சேவைகளுக்காக அனைத்து வங்கிகளிலும் நாளை முதல் டிசம்பர்-2 ஆம் தேதிவரை சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து, சென்னை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

தமிழ்நாடு மாநில வங்கியாளர் குழு நாளை முதல் டிசம்பர் 2ம் தேதி வரை ஆதார் எண் இணைப்பு மற்றும் ரூபே கார்டு வினியோகம் செய்ய சிறப்பு முகாம் நடத்துகிறது. இந்த முகாமில் வாடிக்கையாளர், பொதுமக்கள் ஆதார் எண் மற்றும் செல்போன் எண்களை வங்கி கணக்குடன் இணைத்துக்கொள்ள விண்ணப்பம் அளிக்கலாம்.

மேலும், ஜன்தன் கணக்குகளில் வினியோகிக்கப்படாமல் உள்ள ரூபே கார்டுகளை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம். தொழிலாளர்கள் புதிய ஜன்தன் சேமிப்பு கணக்குகளை துவங்க விண்ணப்பங்களை சிறப்பு முகாமில் அளிக்கலாம்.

எனவே, ஒவ்வொரு வங்கி கிளையிலும் நடைபெறும் இந்த சிறப்பு முகாமை பயன்படுத்தி அனைத்து வசதிகளையும் பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.