மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து அரசு அறிக்கை: உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு!

அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட வேண்டும்... 

News image
Updated On :3 அக்டோபர் 2016, 11:22 am

சென்னை: அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்தவர் பிரபல சமூக நல  ஆர்வலர் 'ட்ராபிக்' ராமசாமி. இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல  மனு ஒன்றைத  தாக்கல் செய்துள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

தமிழக முதலவர் ஜெயலலிதா உடல்நலக் குறைபாடு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவரது உடல்நிலை குறித்த பலவித வதந்திகள் வெளியே பரப்பப்படுகின்றன.  அவரது உடல்நிலை குறித்து அறிய தமிழக மக்கள் மிகவும் ஆவலாக  உள்ளனர்.

தமிழக ஆளுநர் வித்யாசாகர் மற்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியயோர் அவரை சந்தித்து விட்டு சென்றுள்ளனர். அனால் அவர்கள் யாரும் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த தகவல்களை  வெளியிடவில்லை.

எனவே தமிழக அரசனது அவரது உடல்நலம் குறித்து தெளிவான அறிக்கை வெளியிட வேண்டும். மேலும் அமைச்சரவை சகாக்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் அவர் நடத்தியதாக கூறப்படம் ஆலோசனைகள் பற்றிய புகைப்படங்களையும் வெளியிட வேண்டும்.

மேலும் அப்போலோ மருத்துமனையினை சுற்றியுள்ள சாலைகளில் காவல்துறை செயற்கையான தடுப்புகளை உண்டாக்கி, அதன் மூலம் பிற நோயாளிகள்  மருத்துவமனையை அணுகுவதில் சிரமங்களை உண்டாகி வருகிறது.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த மனுவானது நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.