வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

தமிழகத்திற்கு தேவை தற்காலிக முதல்வர்: ஸ்டாலின் அதிரடி!

தமிழகத்திற்கு தற்காலிக முதல்வர் உடனடியாக நியமிக்கப்பட வேண்டும் என்று சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்

News image
Updated On :7 அக்டோபர் 2016, 12:43 pm

DIN

சென்னை: தமிழகத்திற்கு தற்காலிக முதல்வர் உடனடியாக நியமிக்கப்பட வேண்டும் என்று சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில் மேலாண்மை வாரியம் அமைப்பதற்குத் தொடர்ந்து முட்டுக்கட்டையாக இருந்து வரும் மத்திய அரசைக் கண்டித்து தஞ்சையில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக திமுக தலைமை ஏற்கனவே அறிவித்திருந்தது.

அதன்படி இன்று தஞ்சாவூர் தபால் நிலையம் அருகில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதம் நடைபெற்றது. திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்த இந்த உண்ணாவிரதத்திற்கு திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் முன்னிலை வகித்தார்.

இதில் முன்னாள் மத்திய மந்திரிகள் டி.ஆர்.பாலு, பழனி மாணிக்கம், தேர்தல்பணிக்குழு தலைவர் எல்.கணேசன், முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, ரகுபதி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பொன்.முத்துராமலிங்கம், உபயத் துல்லா, மதிவாணன் உள்ளிட்ட ஏராளமானோர் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர்.

மாலை 5 மணியளவில் போராட்டத்தை முடித்து வைத்து திமுக பொருளாளர் ஸ்டாலின் பேசியதாவது:

காவிரி விவகாரத்தில் மத்திய பாஜக அரசு தமிழக விவசாயிகளை வஞ்சித்துள்ளது. காவிரி நதிநீர் பிரச்சினைக்கு மத்திய மாநில அரசுகளே காரணம்.  காவிரி பிரச்சினைக்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமரை ஏன் சந்திக்கவில்லை? அனைத்துக்கட்சித் தலைவர்கள் கூட்டவேண்டும் என்றும் அதற்கு திமுக ஒத்துழைப்பு வழங்கும் என்றும் பலமுறை கூறியும் ஆளுங்கட்சி அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டவில்லை

ஆளுங்கட்சி அனைத்துக்கட்சி கூட்டவில்லை என்றால் திமுக தலைவர் கருணாநிதி உத்தரவுடன் அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டப்படும். ஒத்த கருத்துடைய விவசாயிகளை அழைத்துக் கொண்டு டெல்லிக்கு சென்று பிரதமர், குடியரசுத் தலைவரை திமுக தலைமையில் சந்திப்போம்

இவ்வாறு பேசிய ஸ்டாலின் உண்ணாவிரத போராட்டத்தை  முடித்து வைத்தார்.

அதன் பின்னர் பின்னர் செய்தியாளர்களிடம் ஸ்டாலின் பேசுகையில் கூறியதாவது:

தமிழக முதல்வர் குணமடைந்து வரும் வரை தற்காலிக முதல்வர் நியமிக்கப்பட வேண்டும். இது அவசியமான ஒன்றாகும். முதல்வர் விரைவில் குணமடைய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும். அவர் குணமடையும் வரை தற்காலிக முதல்வர் இருப்பது அவசியம்.

காவிரி பிரச்சினை காவிரி போன்ற முக்கியப் பிரச்சினைகள் தமிழகத்தில் உள்ளன. அவற்றில் முடிவெடுப்பதற்கு முதல்வர் என்பவர் அவசியம்.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.