முதல்வர் தேறி வருகிறார் என அமைச்சர்கள் தகவல்: அப்பல்லோ மருத்துவமனையில் ஸ்டாலின் பேட்டி

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை தேறி வருவதாக தமிழக அமைச்சர்கள் தெரிவித்தனர் என்று சட்டசபை எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துளளார். 
முதல்வர் தேறி வருகிறார் என அமைச்சர்கள் தகவல்: அப்பல்லோ மருத்துவமனையில் ஸ்டாலின் பேட்டி

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை தேறி வருவதாக தமிழக அமைச்சர்கள் தெரிவித்தனர் என்று சட்டசபை எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துளளார். 

உடல்நலக் குறைவுகாரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவை  காண்பதற்காக தமிழக சட்டசபை எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் அப்பலோ மருத்துவமனைக்கு இன்று சென்றார்.அவருடன் திமுக துணை பொதுச்செயலாளர் துரைமுருகன் மற்றும் முன்னாள்  அமைச்சர் பொன்முடி ஆகியோரும் சென்றிருந்தனர்.

ஏறக்குறைய இருபது நிமிடங்கள் மருத்துவமனையில் இருந்த அவர், அதற்குப்பின் மருத்துவமனைக்கு வெளியே வந்து , செய்தியாளர்களிடம் பேசும்பொழுதுது கூறியதாவது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22+-ஆம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக அப்பல்லோ  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் ஓரிரு நாள்களில் உடல்நலம் பெற்று திரும்புவார் என்று முதலில் தெரிவிக்கப்பட்டது. அப்போதே திமுக தலைவர் கருணாநிதி, முதல்வர் விரைவில் உடல்நலம் பெற்று பணிக்கு திரும்ப வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்திருந்தார்,. நானும் வாழ்த்து கூறியிருந்தேன்.

ஆனால் கடந்த இரண்டு நாட்களாக முதல்வர் தொடர்ந்து மருத்துவமையில் மருத்துவமனையில் தங்கியிருக்கவேண்டும் என்று தகவல்கள் வெளியிலாகின. முக்கிய தலைவர்கள் அவரை வந்து சந்தித் து  விட்டு செல்கின்றனர். இந்த நிலையில் முதல்வரை சந்தித்து நலம் விசாரிக்குமாறு, திமுக தலைவர் கருணாநிதி எங்களை பணித்திருந்தார். எனவே நான், திமுக துணை பொதுச்செயலாளர் துரைமுருகன் மற்றும் முன்னாள்  அமைச்சர் பொன்முடி ஆகிய மூவரும் முதல்வரை சந்திக்க வந்திருந்தோம்.

முதல்வரை நேரடியாக சந்திக்க இயலாவிட்டாலும், அங்குள்ள மருத்துவர்கள் மற்றும்  தமிழக அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், விஜயபாஸ்கர் மற்றும் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் முதலவர் உடல்நலம் தேறி வருவதாக எங்களிடம் தெரிவித்தனர்.

என்னவே அவர் பூரணநலம் பெற்று வீட்டுக்கு திரும்ப வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி சார்பாகவும், திமுக சார்பாகவும் என் வாழ்த்துக்களை  தெரிவித்துக் கொள்கிறேன். 

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com