சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

இலங்கை கடற்படைத் தாக்குதலில் 7 தமிழக மீனவர்கள் காயம்

கச்சத் தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலில் 7 மீனவர்கள் காயமடைந்தனர்.

News image
Updated On :12 அக்டோபர் 2016, 6:38 am


ராமேஸ்வரம்: கச்சத் தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலில் 7 மீனவர்கள் காயமடைந்தனர்.

இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட நாட்டுப் படகு மீனவர்களுக்கான சங்க நிர்வாகி எஸ்.பி. ராயப்பன் கூறுகையில், இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலில் 7 மீனவர்கள் காயமடைந்தனர். அதிர் ஒருவருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் அனைவரும் பாம்பன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பாம்பம் பகுதியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அவர்கள் மீது கற்களை வீசி இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தினர். இதனால் மீனவர்கள் அனைவரும் உடனடியாக கரை திரும்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.