பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

'மூலிகை பெட்ரோல்' பெயரில் மோசடி: ராமர் பிள்ளைக்கு 3 ஆண்டு சிறை!

மூலிகை பெட்ரோல் தயாரிப்பதாக கூறி பொதுமக்கள் பலரிடம் ரூ.2.27 கோடி பெற்று மோசடி செய்த வழக்கில் ராமர் பிள்ளை உள்ளிட்ட 5 பேருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து எழும்பூர் சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image
Updated On :25 ஜனவரி 2024, 4:44 am

DIN

சென்னை: மூலிகை பெட்ரோல் தயாரிப்பதாக கூறி பொதுமக்கள் பலரிடம் ரூ.2.27 கோடி பெற்று மோசடி செய்த வழக்கில் ராமர் பிள்ளை உள்ளிட்ட 5 பேருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து எழும்பூர் சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 1999 ஆம் ஆண்டில் 'மூலிகை மூலம் பெட்ரோல்' தயாரிக்கும் முறையை கண்டுபிடித்து விட்டதாக தமிழகத்தில் ராமர் பிள்ளை என்பவர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இந்தியா முழுவதும் இந்த செய்தி  அதிர்வலைகளை கிளப்பியது. கூடவே மூலிகை மூலம் பெட்ரோல் தயாரிக்க முடியுமா என்ற சந்தேகமும் ஏற்பட்டது.

ஆனால் தனது புதிய கண்டுபிடிப்பை எந்த அதிகாரிகள் முன்னிலையிலும் செய்து காட்டி நிரூபணம் செய்யத் தயார் என்று ராமர் பிள்ளை அறிவித்தார். அதன்படி ஐ.ஐ.டி  விஞ்ஞானிகள் முன்னர் செய்தும் காட்டினார். ஆனால், அதை விஞ்ஞானிகள் நம்ப மறுத்தனர். மூலிகையில் இருந்து பெட்ரோல் தயாரிப்பதற்கான சாத்தியக் கூறுகள் அறவே இல்லை என்றுஅவர்கள் தெரிவித்து விட்டனர்.

இதனால் ராமர் பிள்ளை தனது கண்டுபிடிப்பை "மூலிகை எரிபொருள் என்று பெயர் மாற்றம் செய்து விற்பனையில் இறங்கினார். அதற்காக சென்னையில் 15 விற்பனை நிலையங்களையம் துவக்கினார். முன்பணம் பெற்றுக் கொண்டு விற்பனை ஏஜென்டுகளை நியமித்தார். ஆனால், அவரால் விற்பனை செய்யப்பட்ட எரிபொருளை பயன்படுத்திய பெரும்பாலான வாகனங்கள் பழுதாகின. இந்த புகாரை அடுத்து சிபிஐ மேற்கொண்ட அதிரடிச் சோதனையில் தான் ராமர் பிள்ளை கைது செய்யப்பட்டார்.

சாதாரண பெட்ரோலில் கலப்படம் செய்து 'ராமர் பெட்ரோல்' என்ற பெயரில் விற்பனை செய்ததாக ராமர் பிள்ளை உள்ளிட்ட 5 பேர் மீது எழும்பூர் சிபிஐ நீதிமன்றம் வழக்குப்பதிவு செய்ததது. அத்துடன் மூலிகை பெட்ரோல் தயாரிப்பதாக கூறி பொதுமக்கள் பலரிடம் ரூ.2.27 கோடி மோசடி செய்ததாகவும்  வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்து வந்த சென்னை எழும்பூர் சிபிஐ நீதிமன்றம் இன்று ராமர் பிள்ளை உள்ளிட்ட 5 பேருக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து இன்று உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.