என்.எல்.சி தலைமையகத்தை முற்றுகையிட முயன்ற சுமார் 250 கைது
காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம் அமைக்க மறுப்பு தெரிவிக்கும் மத்திய அரசைக் கண்டித்தும், நெய்வேலியில்....


நெய்வேலி: காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம் அமைக்க மறுப்பு தெரிவிக்கும் மத்திய அரசைக் கண்டித்தும், நெய்வேலியில் தயாரிக்கும் மின்சாரத்தைக் கர்நாடகத்துக்கு வழங்கக் கூடாது எனத் தமிழக அனைத்து விவசாயிகளின் சங்க ஒருங்கிணைப்புக் குழு சார்ப்பில் முற்றுகை போராட்டம் நடத்திய 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
என்.எல்.சி தலைமை அலுவலகத்தை முற்றுகை போராட்டம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதன்படி, இன்று காலை நெய்வேலி ஆர்ச் கேட்-யிலிருந்து தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருகிணைப்பு குழுவின் மண்டல தலைவர் விநாயக மூர்த்தி தலைமையில் விவசாய சங்க பிரதிநிதிகள் தொழிற்சங்கங்கள் அரசியல் கட்சியினர் சுமார் 250-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாகப் புறப்பட்டு நெய்வேலி என்.எல்.சி தலைமை அலுவலகத்தை முற்றுகையிட வந்தனர்.
செக்போஸ்ட் அருகே வந்த அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் வட்டம் 8-ல் உள்ள சமுதாய கூடத்தில் வைத்துள்ளனர். இப்போராட்டத்தில் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...