நீர்ப்பிடிப்புப் பகுதியில் மழை: அடவிநயினார் அணை நீர்மட்டம் 3 அடி உயர்வு
மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்ப்பிடிப்புப் பகுதியில் மிதமான மழை பெய்ததை அடுத்து அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்து 20 அடியாக இருந்தது.


திருநெல்வேலி: மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்ப்பிடிப்புப் பகுதியில் மிதமான மழை பெய்ததை அடுத்து அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்து 20 அடியாக இருந்தது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் மிதமான மழை பெய்துள்ளது. புதன்கிழமை காலை நிலவரப்படி ராமநதி அணையில் 10 மி.மீ, கருப்பாநதி அணையில் 6 மி.மீ, குண்டாறு அணையில் 3 மி.மீ, அடவிநயினார் அணையில் 10 மி.மீ, நம்பியாறு அணையில் 42 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.
பிரதான அணைகளான பாபநாசம், மணிமுத்தாறு அணைப் பகுதியில் மழை இல்லாததால் அணைகளுக்கு நீர்வரத்து இல்லை. பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 97 கனஅடி, மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 33 கனஅடி, கடனாநதி, ராமநதி அணைகளுக்கு தலா 10 கனஅடி, அடவிநயினார் அணைக்கு விநாடிக்கு 8 கனஅடியும் நீர்வரத்து இருந்தது.
பாபநாசம் அணையின் நீர்மட்டம் 19.55 அடி, சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 49.08 அடி, மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 37.92 அடி, கடனாநதி அணையின் நீர்மட்டம் 25 அடி, ராமநதி அணையின் நீர்மட்டம் 25 அடியாகவும் இருந்தது. அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்து 20 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 24.75 அடி, குண்டாறு அணையின் நீர்மட்டம் 16.87 அடி, வடக்குப் பச்சையாறு அணை நீர்மட்டம் 2 அடி, கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 2 அடியாகவும் இருந்தது. குடிநீர் தேவைக்காக பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து 250 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு்ள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...