எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை!

வழிப்பாதையை தடுத்து தெருவை மூடி இடையூறு செய்வதாக புகார் கூறி, திங்கள்கிழமை திருநெல்வேலியில் ஆட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

News image
Updated On :12 செப்டம்பர் 2016, 12:33 pm

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி: வழிப்பாதையை தடுத்து தெருவை மூடி இடையூறு செய்வதாக புகார் கூறி, திங்கள்கிழமை திருநெல்வேலியில் ஆட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் புளியங்குடி நகராட்சி 8 ஆவது வார்டு பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் 100 க்கும் மேற்பட்டோர் ஊர் நாட்டாமை பேச்சிமுத்து தலைமையில் திரண்டு முற்றுகையிட்டனர்.

அப்போது அவர்கள் கூறியது: புளியங்குடி நகராட்சியில் 8 ஆவது வார்டில் தாழ்த்தப்பட்ட பறையர் சமுதாயத்தை சேர்ந்த 500 குடும்பங்கள் அங்குள்ள முப்புடாதி அம்மன் கோயில் முதல் தெரு, 2 ஆவது தெரு, 3 ஆவது தெருக்களில் 100 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர்.

அப்பகுதியில் வசிக்கும் மற்றொரு சமுதாயத்தினர் முப்புடாதி அம்மன் கோயில் 3 ஆவது தெருவை பொது வழிப்பாதையாக பயன்படுத்த முடியாத வகையில் தடுத்து தெருவை மூடி இடையூறு செய்து வருவதாக புகார் தெரிவித்தனர்.

இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி டாக்டர் அம்பேத்கர் இந்து ஆதிதிராவிட சமுதாய பொதுநல சேவை சங்கம் சார்பில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.